பெங்களூரு: ஐரோப்பிய நிறுவனமான கேப்ஜெமினி, 1.3 பில்லியன் டாலர் வருவாய் பெறும் ஐகேட் நிறுவனத்தின் 48 சதவீத பங்குகளைக் கைப்பற்றும் திட்டத்தில் இறங்கியுள்ளது.
ஐகேட் நிறுவனத்தின் பங்குகளைக் கைப்பற்ற கேப்ஜெமினி சுமார் 4 பில்லியன் டாலர் முதலீடு செய்ய உள்ளது. இதன்மூலம் கேப்ஜெமினி ஐகேட் நிறுவனத்தின் உயர் மட்ட நிர்வாக குழுவில் இடம்பெற உள்ளது.
ஒப்பந்தம்
48 சதவீத பங்குகள் கைப்பற்றுதல் திட்டத்திற்கு இரு நிறுவனங்களும், நிர்வாக இயக்குனர்களும் ஒப்புக்கொண்டு திங்கட்கிழமை காலை எழுத்து வடிவிலான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு உள்ளனர்.
கேப்ஜெமினி-யின் திட்டம்
ஐரோப்பா மற்றும் ஆசிய சந்தையில் சிறப்பாகச் செயல்படும் கேப்ஜெமினி, அமெரிக்கச் சந்தையில் தனது வர்த்தகத்தை விரிவாக்கும் திட்டத்துடன் ஐகேட் நிறுவனத்தின் பெருவாரியான பங்குகளை 4 பில்லியன் டாலர் மதிப்புள்ள கையகப்படுத்தும் திட்டத்தில் இறங்கியுள்ளது.
ஐகேட்
இந்நிறுவனத்தின் 79 சதவீத வருவாய் மேற்கு அமெரிக்க வாடிக்கையாளர்களிடம் இருந்து பெறப்படுகிறது. இதன் மூலம் கேப்ஜெமினி அதிகளவிலான நன்மை அடையும் எனச் சந்தை வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.
ஐகேட் நிறுவனம் மேற்கு அமெரிக்கா மட்டும் அல்லாமல், ஐரோப்பா மற்றும் ஆசியாவிலும் குறைப்பிடத்தக்க அளவில் வாடிக்கையாளகர்களைக் கொண்டு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது.
அசோக் வெமுரி
இன்போசிஸ் நிறுவனத்தின் உயர் மட்ட குழுவில் இருந்து கடந்த வருடம் வெளியேறிய அசோக் வெமுரி, ஐகேட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.
ஐகேட் நிறுவன சீஇஓ பதிவியில் ஒரு வருடம் முடிந்த நிலையில் இந்நிறுவனத்தைக் கேப்ஜெமினி கைபற்றுவது குறிப்பிடத்தக்கது.
கணிப்புகள்
இருநிறுவனங்களின் இணைப்பின் மூலம் 2015ஆம் வருடத்தில் இக்கூட்டணியின் மொத்த வருவாய் 12.5 பில்லியன்டாலராக உயரும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
தலைவர்கள்
இந்த இணைப்புக் குறித்து ஐகேட் நிறுவனத்தின் சீஇஓ அசோக் வெமுரி, நிறுவனர்களான அசோக் திரிவேதி மற்றும் சனில்வத்வானி ஆகியோர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
பங்கு கைப்பற்றுதல்
கேப்ஜெமினி நிறுவனத்தின் பங்கு கைப்பற்றுதல் திட்டம் 2015ஆம் ஆண்டின் இரண்டாவது பாதியில் முழுமையாக முடிவடையும் என ஐகேட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications