ஸ்மார்ட்போன் நிறுவனத்தில் முதலீடு செய்த முதல் இந்தியர்.. "ரத்தன் டாடா"!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: சீனாவின் முன்னணி மொபைல் தயாரிப்பு மற்றும் விற்பனை நிறுவனமான ஜியோமி நிறுவனத்தில், டாடா நிறுவனத்தின் முன்னாள் தலைவரான ரத்தன் டாடா முதலீடு செய்துள்ளார்.

 

இதன் மூலம் ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனத்தில் முதலீடு செய்த முதல் இந்தியர் என்ற பெருமையை ரத்தன் டாடா பெற்றுள்ளார்.

இந்திய நிறுவனம்

இந்திய நிறுவனம்

ஜியோமி நிறுவனம் இந்திய நிறுவனமாக மாறும் திட்டத்துடன் இருக்கும் இவ்வேளையில், ரத்தன் டாடாவின் முதலீடு இந்நிறுவனத்திற்கு மிகப்பெரிய வரவேற்பாக உள்ளது.

மனு ஜெயின்

மனு ஜெயின்

இதுகுறித்து ஜியோமி இந்தியா நிறுவனத்தின் தலைவர் மனு ஜெயின் கூறுகையில், " ரத்தன் டாடா அவர்கள் ஜியோமி இந்தியா நிறுவனத்தில் முதலீடு செய்ததும், நிர்வாகக் குழுவில் இணைந்ததும் மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இந்தியாவில் எங்களது வளர்ச்சிக்கு ரத்தன் டாடாவின் பங்கிடு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்" என்று தெரிவித்தார்.

ரத்தன் டாடா
 

ரத்தன் டாடா

கடந்த டிசம்பர் 2012ஆம் ஆண்டு 100 பில்லியன் டாலர் மதிப்புள்ள டாடா குழும நிறுவனங்களின் தலைவர் பதவியில் இருந்து ஓய்வுபெற்ற ரத்தன் டாடா, தனது சொந்த முதலீட்டு நிறுவனத்தின் மூலம் பல நிறுவனங்களில் முதலீடு செய்துவருகிறார்.

தற்போது இவர் டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவராக இருக்கிறார்.

 

முதலீடுகள்

முதலீடுகள்

ரத்தன் டாடா தனது ஓய்வுவிற்குப் பின் பல துவக்க நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளார். இதில் ஸ்னாப்டீல், அர்பன்லேடர், ப்ளூ ஸ்டோன், கார்தேக்கோ.காம், பே டிஎம் போன்ற நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளார்.

பின் லின்

பின் லின்

சீனாவிற்கு அடுத்தப்படியாக எங்கள் நிறுவனத்தின் முக்கியச் சந்தையாக விளங்குவது இந்தியா தான். இந்நிலையில் இந்தியாவில் ஸ்மார்ட்போன் உற்பத்தி தளம் அமைக்கத் திட்டமிட்டுள்ளோம் என ஜியோமி நிறுவனத்தின் தலைவர் பின்லின், தனது இந்திய பயணத்தின் போது தெரிவித்தார்.

இந்திய நிறுவனம்

இந்திய நிறுவனம்

இந்திய நிறுவனமாக மாற ஆசைப்படும் ஜியோமி..!இந்திய நிறுவனமாக மாற ஆசைப்படும் ஜியோமி..!

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Ratan Tata picks up stake in Xiaomi

Iconic business leader Ratan Tata has acquired a stake in Chinese handset maker Xiaomi, the first investment by any Indian in the smartphone maker.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X