பெங்களூரு: விப்ரோ நிறுவனத்தின் தலைவரான அசிம் பிரேம்ஜி அவர்களின் மூத்த வாரிசான ரிஷாத் பிரேம்ஜி, இந்நிறுவனத்தில் 8 வருடங்களாகப் பல்வேறு பணிகளில் பணியாற்றித் தற்போது நிர்வாகக் குழுவில் இணைந்துள்ளார்.
பங்குதாரர்களின் விருப்பத்தின் பெயரிலேயே ரிஷாத் அவர்கள் நிர்வாகக் குழுவில் இணைக்கப்பட்டுள்ளர் எனவும், இதில்யாருடைய தலையீடும் இல்லை என்று விப்ரோ நிறுவனத்தின் சீஇஓ டி.கே.குரியன் தெரிவித்துள்ளார்.
அசிம் பிரேம்ஜி
சில வருடங்களுக்கு இந்நிறுவனத்தின் தலைவர் அசிம் பிரேம்ஜி தொலைக்காட்சி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில்,நிறுவன பணிகளில் இணைந்துள்ள ரிஷாத் ஒருபோதும் சீஇஓ பதவில் இருக்கமாட்டார் எனத் தெரிவித்தார்.
ரிஷாத் பிரேம்ஜி
இவர் மிகவும் எளிமையானவர், எந்த விதமான பகட்டும் இல்லாமல் அனைவருடைய கருத்துக்களையும் பொறுமையுடன்கேட்கும் மன உடையவர் என இந்நிறுவனத்தின் முன்னாள் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
சுரேஷ் சேனாபதி
இந்நிறுவனத்தின் தலைமை நிதியியல் அதிகாரி பதவியில் இருந்த சுரேஷ் சேனாபதி தனது சொந்த காரணங்களுக்காக நிறுவன பொறுப்புகளில் இருந்து விலகுவதாகத் தெரிவித்தார். இவர் நிர்வாகக் குழுவிலும் இடம்பெற்றிருந்தார்.
இதன் காரணமாக நிர்வாகக் குழுவில் காலியாகும் இடத்தில் ரிஷாத் பிரேம்ஜி அமர்த்த பங்குதாரர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர். வரும் மே 1ஆம் தேதி முதல் நிர்வாகக் குழு பொறுப்புகளில் ரிஷாத் இணைய உள்ளார்.
படிப்பு
இவர் வெஸ்லைன் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் பட்டமும், ஹார்வர்டு பிஸ்னஸ் பள்ளியில் மேலாண்மை முதுகலை பட்டமும் பெற்றார்.
விப்ரோ வேண்டாம்..
இன்றைய நிலையில் பெரும் தொழிலதிபர்களின் வாரிசுகள் கல்லூரி படிப்பு முடிந்த உடனே நிறுவன பொறுப்புகளில்உடனே சேர்ந்துவிடுகின்றனர்.
ஆனால் ரிஷாத், படிப்பை முடித்த உடனே பெயின் அண்ட் கோ நிறுவனத்தில் 2 வருடம், ஜிஇ மேப்பிடல் நிறுவனத்தில் 4வருடம் பணியாற்றினர்.
அதன் பின்பே விப்ரோ நிறுவனத்தில் நேர்முகத் தேர்வை சந்தித்து மேலாளர் பதவியைப் பெற்றார்.
விப்ரோவில் ரிஷாத்
மேலாளர் பதவியில் இணைந்த ரிஷாத், கடந்த 8 வருடங்களாகப் பல்வேறு துறை மற்றும் பதவிகளில் பணியாற்றி நிறுவனம் மற்றும் வர்த்தக நெறிமுறைகளை முழுமையாகத் தெரிந்துகொண்டு வருகிறார்.


Click it and Unblock the Notifications