புதிய திட்டம்.. புதிய கட்டணம்.. ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் அசத்தலான சலுகை..

டெல்லி: இந்தியாவின் மலிவு விலை விமானப் போக்குவரத்து நிறுவனமான ஸ்பைஸ்ஜெட், மீண்டும் தனது உள்நாட்டு விமான சேவையில் சலுகை விலை விற்பனையைத் துவங்கியுள்ளது.

வாடிக்கையாளர்களைக் கவர, அதிலும் முக்கியமாக வேலை நிமிர்த்தமாக வெளியூர் செல்லும் பயணிகளைக் கவர 999 ரூபாய் என்ற புதிய சலுகை கட்டணத்தை அறிமுகம் செய்துள்ளது.

ஹேன்ட் பேக்கேஜ்

ஹேன்ட் பேக்கேஜ்

பொதுவாக வேலை நிமிர்த்தமாக வெளியூர் செல்லும் பயணிகளே குறைவான சுமைகளைக் கொண்டு வருவார்கள்.

இவர்களைக் குறிவைத்து ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் ஹேன்ட் பேக்கேஜ் மட்டும் கொண்டு வரும் பயணிகளுக்கு 999 ரூபாய்என்ற சலுகையை அறிவித்துள்ளது..

 

ரயில் கட்டணம்

ரயில் கட்டணம்

இந்திய ரயில்வே துறை அளிக்கும் 2ஆம் தர ஏசி ரயில் கட்டணத்தை ஒப்பிடுகையில், தற்போது ஸ்பைஸ்ஜெட் அளித்துள்ள சலுகை கட்டணம் குறைவாகும்.

புதிய நிர்வாகம்

புதிய நிர்வாகம்

இந்நிறுவனத்தின் முன்னாள் தலைவரான கலாநிதி மாறன் ஸ்பைஸ்ஜெட் நிறுவன பொறுப்புகளில் இருந்து விலகியதால், நிர்வாக அதிகாரங்கள் அனைத்தும் அஜய் சிங்-கிற்கு கைமாறியுள்ளது.

இவரது தலைமையில் பல மாற்றங்களைச் சந்தித்துள்ள ஸ்பைஸ்ஜெட், தற்போது சலுகை திட்டங்களின் மூலம் வாடிக்கையாளர்கள் அதிகரிக்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது.

 

அதிக கட்டணம்

அதிக கட்டணம்

வாடிக்கையாளர்கள் ஹேன்ட் பேக்கேஜ் தவிர, அதிகளவிலான சுமையைக் கொண்டு செல்ல நினைத்தால், 15 கிலோ வரை ஸ்பைஸ்ஜெட் அனுமதி அளிக்கிறது.

இதற்கு நிலையான கட்டணமாக 750 ரூபாயை ஸ்பைஸ்ஜெட் விதித்துள்ளது.

 

முன்று நாள் சலுகை திட்டம்

முன்று நாள் சலுகை திட்டம்

இச்சலுகையில் டிக்கெட் விற்பனை 3 நாள் நடைபெற உள்ளது. இக்கட்டண சலுகையைப் பெற பயணிகள் ஜூலை 1ஆம்தேதி முதல் அக்டோபர் 15ஆம் தேதி வரையிலான தேதிகளில் தங்களது பயணத்தை முன்பதிவு செய்ய வேண்டும்.

ஸ்பைஸ்ஜெட் எபக்ட்

ஸ்பைஸ்ஜெட் எபக்ட்

இந்நிறுவனத்தின் அதிகளவிலான சலுகை திட்டங்களின் மூலம் இந்திய விமானப் பயணிகள் போக்குவரத்தில் கடந்தவருடம் மிகப்பெரிய உயர்வைச் சந்தித்தது.

கச்சா எண்ணெய்யின் விலை

கச்சா எண்ணெய்யின் விலை

கடந்த 8 மாதத்தில் கச்சா எண்ணெய்யின் விலை அதிகளவில் குறைந்ததால், விமான நிறுவனங்கள் அதிகளவிலானகட்டண சலுகையை அறிவித்துள்ளது.

விமானப் பயணச் செலவுகளில் 60 சதவீத கட்டணங்கள் எரிபொருள் செலவீனமாகும்.

 

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+