மீண்டும் முதல் இடத்தைப் பிடித்தார் முகேஷ் அம்பானி.. சோகத்தில் திலீப் சங்வி!

பெங்களூரு: உலகின் முன்னணி வர்த்தகப் பத்திரிக்கை நிறுவனமான போர்ப்ஸ், 2015ஆம் ஆண்டுக்கான பணக்காரர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. எந்த வருடமும் இல்லாத அளவிற்கு இப்பட்டியலில் சுமார் 90 இந்தியர்கள் இடம்பெற்றுள்ளனர்.

பிரதமர் மோடி தலைமையிலான அரசில் இந்தியாவில் பணக்காரர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக இந்நிறுவன வெளியீடு கூறுகிறது. இந்த வருடம் பணக்கார்கள் பட்டியலில் புதிதாகச் சுமார் 28 பேர் இணைந்துள்ளதாகவும் போர்ப்ஸ் பத்திரிக்கை தெரிவித்துள்ளது.

கடந்த வருடம் இந்தியாவில் மிகப்பெரிய பணக்காரர் என்ற நிலை இழந்த முகேஷ் அம்பானி, மீண்டும் தனது இடத்தைப் பிடித்துள்ளார்.

சரி வாங்க இந்த வருடம் பணக்காரர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ள டாப் 10 இந்தியர்களைப் பார்ப்போம்...

1 பில்லியன் டாலர்

1 பில்லியன் டாலர்

போர்ப்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில், உலகளவில் சுமார் 1,826 பேர் 1 பில்லியன் டாலருக்கும் அதிகமான சொத்துக்களை வைத்துள்ளதாகத் தெரிவிக்கிறது.

இந்தியாவில்..

இந்தியாவில்..

2015ஆம் ஆண்டுக்கான பணக்காரர்கள் பட்டியலில் சுமார் 90 இந்தியர்கள் இடம்பற்றுள்ளனர். இதில் 28 பேர் முதல்முறையாக இப்பட்டியலில் நுழைந்துள்ளவர்கள். மேலும் 5 பேர் கடந்த வருடம் பெற இடத்தில் நிலையாக உள்ளனர்.

1. முகேஷ் அம்பானி

1. முகேஷ் அம்பானி

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவரான முகேஷ் அம்பானி 21 பில்லியன் டாலர் சொத்தின் மதிப்பு உடன் இப்பட்டியலில் 39வது இடத்தைப் பிடித்துள்ளார். இவர் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் தலைவரகவும், நிர்வாக இயக்குநரகவும் பொறுப்பு வகுக்கிறார்.

2. திலிப் சங்வி

2. திலிப் சங்வி

இந்தியாவின் முன்னணி மருந்த உற்பத்தி மற்றும் ஏற்றுமதி நிறுவனமான சன் பார்மா நிறுவனத்தின் தலைவர் திலிப் சங்வி 20 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் 44வது இடத்தில் உள்ளார்.

இந்திய பணக்காரர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானி அவர்களைப் பின்னுக்குத் தள்ளிய பெறுமை இவருக்கு உண்டு.

 

3. அசிம் பிரேம்ஜி

3. அசிம் பிரேம்ஜி

இவர் பெங்களூரை தலைமையகமாகக் கொண்டு உலக முழுவதும் விரிந்து இருக்கும் விப்ரோ நிறுவனத்தின் தலைவரானஅசிம் பிரேம்ஜி, இப்பட்டியலில் 19.1 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் 48வது இடத்தில் உள்ளர்.

மேலும் இவர் 2 பில்லியன் டாலர் அளவு சொத்துக்களைத் தனது சொந்த அறக்கட்டளையின் மூலம் நன்கொடையாகக்கொடுத்துள்ளார்.

 

 4. ஷிவ் நாடார்

4. ஷிவ் நாடார்

இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் ஐடி நிறுவனங்களில் ஒன்றான ஹெச்சிஎல் நிறுவனத்தின் தலைவரான ஷிவ்நாடார் இப்பட்டியலில் 14.8 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் 66வது இடத்தில் உள்ளார்.

5. லக்ஷ்மி மிட்டல்

5. லக்ஷ்மி மிட்டல்

எஃகு உற்பத்தியில் இந்தியா மற்றும் பிரிட்டன் நாடுகளில் முன்னணி நிறுவனமாகத் திகழும் லக்ஷ்மி மிட்டல் கடந்தமந்தமான வளர்ச்சியாலும், நிறுவனத்தின் பங்கு மதிப்பு குறைந்ததாலும் கடந்த ஒரு வருடத்தில் மட்டும் சுமார் 3 பில்லியின்டாலரை இழந்துள்ளதாகப் போர்பஸ் தெரிவித்துள்ளது.

இதனால் இவருடை சொத்துமிப்பு 13.5 பில்லியன் டாலராகா குறைந்து 82ஆம் இடத்திற்குச் சரிந்துள்ளார்.

 

6. கே.எம்.பிர்லா

6. கே.எம்.பிர்லா

ரிலையன்ஸ் குழுமத்தை போலப் பல துறைகளில் சிறந்து விளங்கும் ஆதித்யா பிர்லா குழுமத்தின் தலைவர்குமாரமங்களம் பிர்லா, 9 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் இப்பட்டியலில் 142வது இடத்தில் உள்ளார்.

7. உதய் கோட்டாக்

7. உதய் கோட்டாக்

நாட்டின் 5 வது மிகப்பெரிய தனியார் வங்கியான கோட்டாக் மஹிந்திரா வங்கியின் நிறுவனர் உதய் கோட்டாக் 7.1பில்லியன் டாலர் மதிப்புடன் 185 வது இடத்தில் உள்ளார்.

8. கெளதம் அதானி

8. கெளதம் அதானி

பிரதமர் நரேந்திர மோடியின் நெருங்கிய நண்பரான கெளதம் அதானி 6.6 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன்இப்பட்டியலில் 208 வது இடத்தில் உள்ளார்.

கடந்த 10 வருடத்தில் அதானி குழுமத்தின் வளர்ச்சி அசாதாரமானது, குறிப்பாக மின் உற்பத்தி, துறைமுகம், ஏற்றுமதி,இறக்குமதி ஆகிய துறைகளில் அவர் அதிகப்படியான வளர்ச்சியைச் சந்தித்துள்ளார்.

 

9. சுனில் மிட்டல்

9. சுனில் மிட்டல்

ஏர்டெல் நிறுவனத்தின் தலைவர் சுனில் மிட்டல் தொலைத்தொடர்பு சேவையின் மன்னன். இப்பட்டியலில் 6.6 பில்லியன்டாலர் சொத்து மதிப்புடன் 208வது இடத்தில் உள்ளார்.

10. சைரஸ் பூனாவாலா

10. சைரஸ் பூனாவாலா

தடுப்புமருந்து தயாரிப்பு மற்றும் ஆராய்ச்சியில் ஈட்டுப்பட்டுள்ள சைரஸ் பூனாவாலா 6.7 பில்லியன் டாலர் சொத்துமதிப்புடன் இப்பட்டியலில் 208வது இடத்தில் உள்ளார்.

சாவித்ரி ஜிண்டல்

சாவித்ரி ஜிண்டல்

பணக்காரர்கள் என்றால் ஆண்கள் மட்டும் தான் இருக்க வேண்டுமா.. இங்குப் பெண்களும் உள்ளனர்.

ஓபி ஜிண்டல் குழுவின் நிர்வாகத் தலைவரான சாவித்ரி ஜிண்டல் இந்தியாவின் பணக்கார மனிதர்களில்இடம்பெற்றுள்ளார். அவரின் தனிப்பட்ட சொத்து மதிப்பு 4.9 பில்லியன் டாலருடன் இப்பட்டியலில் 283வது இடத்தைப்பிடித்துள்ளார்.

 

இந்து ஜெயின்

இந்து ஜெயின்

பென்னெட், கோல்மேன் அண்ட் கோ என்னும் மீடியா நிறுவனத்தின் தலைவரான இந்து ஜெயின் இப்பிடியலில் 2.3பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் 603வது இடத்தில் உள்ளார்.

அனு அகா

அனு அகா

தெர்மேக்ஸ் என்னும் இன்ஜினியரிங் நிறுவனத்தின் தலைவரான அனு அகா உலகப் பணக்காரர்கள் பட்டியலில் 1.11பில்லியன் டாலர் மதிப்புடன் 1312வது இடத்தில் உள்ளார்.

கிரண் மசும்தர்-ஷா

கிரண் மசும்தர்-ஷா

நாட்டின் முன்னணி பயோபார்மா நிறுவனமான பயோகான் நிறுவனத்தின் தலைவரான கிரண் மசும்தர்-ஷா 1 பில்லியன்டாலர் சொத்து மதிப்புடன் 1741வது இடத்தில் உள்ளார்.

முதல் இடம்

முதல் இடம்

உலகளவில் இப்பிட்டியலில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரியானபில் கேட்ஸ் 79.2 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் முதல் இடத்தில் உள்ளார்.

கடந்த 21 வருடத்தில் இவர் 16 வருடமாக முதல் இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

கார்லோஸ் ஸ்லிம் மற்றும் வாரன் பஃபெட்

கார்லோஸ் ஸ்லிம் மற்றும் வாரன் பஃபெட்

பில் கேட்ஸ் தொடர்ந்து 2ஆம் இடத்தில் மெக்சிகோவின் கார்லோஸ் ஸ்லிம், 3வது இடத்தில் அமெரிக்க முன்னணிமுதலீட்டு நிறுவனமான பெர்க்ஷயர் ஹாத்வே நிறுவனத்தின் நிறுவனரான வாரன் பஃபெட் பிடித்துள்ளனர்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+