சிங்கப்பூர்: உலகில் அதிகளவில் கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகளில் முதன்மையான சவுதி அரேபியாவில் ஸ்திரமற்ற அரசியல் நிலை உருவாகி இருப்பதால் ஆசிய சந்தையில் கச்சா எண்ணெயின் விலை சரிந்துள்ளது.
இந்த விலை சரிவில் இந்நாட்டின் அதிகப்படியான எண்ணெய் உற்பத்தியும் முக்கிய காரணமாக உள்ளது. கடந்த ஜனவரி மாதம் முதல் இந்நாட்டின் எண்ணெய் உற்பத்தி அதிகரித்தது.
சவுதி அரேபியா
புதன்கிழமை சவுதி மன்னரான சல்மான், தனது அரசவையில் இருந்து சில முக்கிய அமைச்சர்கள் மற்றும் நேசிய எண்ணெய் நிறுவனமான ஆராம்கோவின் தலைமை நிர்வாக அதிகாரியை பதவியில் இருந்து நீக்கியதாலும், பல பணியிடங்களில் புதிய ஆட்களை நியமித்ததாலும், இத்தகைய சூழ்நிலை உருவாகியுள்ளது.
10 சென்ட்கள் சரிவு
இதன் காரணமாக சர்வதேச சந்தையில், புதன் கிழமை வர்த்தகத்தில் பிரன்ட் கச்சா எண்ணெயின் விலை 10 சென்ட்கள் குறைந்து 64.54 டாலரில் இருந்து 64.40 டாலருக்கு குறைந்துள்ளது.
கச்சா எண்ணெயின் இருப்பு
அமெரிக்க சரக்கு இருப்பு அறிக்கையில் அமெரிக்காவின் கச்சா எண்ணெயின் இருப்பு அதிகரித்துள்ளதால், உலக சந்தையில் இதன் விநியோகம் பாதித்துள்ளதாக வர்த்தக வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்க WTI கச்சா எண்ணெய்
இதன் காரணமாக அமெரிக்க WTI கச்சா எண்ணெயின் விலை 18 சென்டுகள் குறைந்து 56.88 டாலருக்கு சரிந்துள்ளது.
இருப்பு அளவு
அமெரிக்காவில் எண்ணெய் இருப்பு அளவு ஏப்ரல் 24ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் சுமார் 2.9 பில்லியன் பேரல்கள் உயர்ந்திருக்கும் என கணிப்புகள் வெளிவந்துள்ளது.


Click it and Unblock the Notifications