டெல்லி: இந்திய சந்தையில், 2015ஆம் ஆண்டின் பிப்ரவரி மாத முடிவில் நாட்டின் அந்நிய முதலீட்டின் அளவு சுமார் 63 சதவீதம் உயர்ந்து 3.28 பில்லியன் டாலர், அதாவது 20,820 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
28.81 பில்லியன் டாலர்
2014ஆம் நிதியாண்டின் ஏப்ரல் - பிப்ரவரி வரையிலான காலகட்டத்தில் சீனா, அமெரிக்கா நாடுகள் உட்பட்ட பல நாடுகள் இந்திய சந்தையில் 28.81 பில்லியன் டாலர் வரை முதலீடு செய்துள்ளது.
இது கடந்த நிதியாண்டை ஒப்பிடுகையில் இதன் அளவு 39 சதவீதம் அதிகம் என மத்திய தொழில்துறை கொள்கை மற்றும் மேம்பாட்டு துறை தெரிவித்துள்ளது.
கடந்த நிதியாண்டில் இதன் அளவு 20.76 பில்லியன் டாலராக இருந்தது.
டாப் 10 துறைகள்
இந்தியாவில் அந்நிய முதலீடுகள் குவியும் டாப் 10 துறைகளில், சேவைத்துறை முதன்மையானது. இதன்படி கடந்த 11 மாத காலகட்டத்தில் சேவைத் துறையில் மட்டும் சுமார் 2.88 பில்லியன் டாலர் முதலீடு செய்யப்பட்டுள்ளது.
பிற துறைகள்
பிற முக்கிய துறைகளான தொலைதொடர்பு துறையில் 2.85 பில்லியன் டாலரும், ஆட்டோமொபைல் துறையில் 2.42 பில்லியன் டாலரும், கம்பியூட்டர் மென்பொருள் மற்றும் வன்பொருள் துறையில் 2.04 பில்லியன் டாலரும், பார்மா துறையில் 1.30 பில்லியன் டாலர் அளவு முதலீடு செய்யப்பட்டுள்ளது.
மொரிஷியஸ்
இந்தியாவில் அதிகளவில் முதலீடு செய்த நாடுகளில் மொரிஷியஸ் 8.44 பில்லியன் டாலர் முதலீடு செய்து முதலிடத்தில் உள்ளது.
சிங்கப்பூர் ( 6.42 பில்லியன் டாலர்), நெதர்லாந்து ( 3.29 பில்லியன் டாலர்), ஜப்பான் (1.72 பில்லியன் டாலர்) மற்றும் அமெரிக்கா (1.69 பில்லியன் டாலர்) ஆகிய நாடுகள் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளன.
நிலுவை தொகை
நாட்டில் அந்நிய முதலீடு தொடர்ந்து அதிகரித்து வருவதால் மத்திய அரசு நிலுவை தொகையை சரியான காலகட்டத்தில் செலுத்தி வருவதாக நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.
More From GoodReturns

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?



Click it and Unblock the Notifications