டெல்லி: 2015ஆம் ஆண்டு துவக்கம் முதல் ரிசர்வ் வங்கி, வணிக வங்கிகளுக்கும் அளிக்கும் கடன் விகிதமான ரெப்போ விகிதத்தை 2 முறை குறைத்தும், சுமார் 70 வணிக வங்கிகள் வட்டி வகிதத்தைக் குறைக்காமல் மக்களை ஏமாற்றி வருகின்றன.
ரிசர்வ் வங்கி கடந்த ஜனவரி 15ஆம் தேதி ரெப்போ விகிதத்தில் 0.25 சதவீத குறைப்பும், மார்ச் 4ஆம் தேதி 0.25 சதவீத வட்டி குறைப்பும் அறிவித்தது.
ஜெயந்த் சின்ஹா
இந்திய வங்கித் துறையில் செயல்பட்டு வரும் 91 வங்கிகளில் 21 வணிக வங்கிகள் மட்டும் வாடிக்கையாளர்களுக்கும் அளிக்கும் வட்டி வகிதத்தைக் குறைத்துள்ளதாக நிதி அமைச்சரான ஜெயந்த் சின்ஹா செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.
21 வங்கிகள்
வட்டிக் குறைப்பை அறிவித்த 21 வங்கிகளில், 4 பொதுத்துறை வங்கிகள், 6 தனியார் துறை வங்கிகள் மற்றும் 11 பன்னாட்டு வங்கிகள் அடக்கம்.
நிலையான வட்டி வகிதம்
கடந்த 4 மாதங்களில் வணிக வங்கிகளுக்கான வட்டி விகிதத்தில் 0.1 - 0.5 சதவீதம் வரை ரிசர்வ் வங்கி குறைத்தாலும், 70 வணிக வங்கிகள் தங்களது வட்டி விகிதத்தை குறைக்காமல் வாடிக்கையாளர்களை ஏமாற்றி வருவதாக நிதியமைச்சகம் குற்றம் சாட்டியுள்ளது.
வீடு மற்றும் வாகனம் கடன்
இக்காலகட்டத்தில் வணிக வங்கிகள் அளிக்கும் வீடு மற்றும் வாகன கடன்களின் அளவு சுமார் 8.53 சதவீதம் குறைந்துள்ளதாகவும் சின்ஹா தெரிவித்தார்.
91 வங்கிகள்
இந்தியாவில் மொத்தம் 27 பொதுத்துறை வங்கிகள், 20 தனியார் துறை வங்கிகள் மற்றும் 44 வெளிநாட்டு வங்கிகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் பொதுத்துறை வங்கிகளின் பங்கு 70 சதவீதம் என்பது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications