பெங்களூரு: இந்தியாவின் ஆன்லைன் சில்லறை வர்த்தகத்தில் மிகப்பெரிய இடத்தை பிடித்துள்ள பிளிப்கார்ட் நிறுவனம், 2015ஆம் ஆண்டு இறுதிக்குள் தனது இணைய பக்க சேவையை நிறுத்திவிட்டு முற்றிலும் மொபைல் சேவை நிறுவனமாக மாற திட்டமிட்டுள்ளது.
இத்திட்டத்தை மேம்படுத்தும் விதமாக பிளிப்கார்ட் நிறுவனம், மொபைல் மார்கெட்டிங் துறையில் துவக்க நிறுவனமாக திகழும் ஆபிட்டிரேட் நிறுவனத்தை கைபற்றியுள்ளது.
இந்நிறுவன கைபற்றுதல் குறித்த முதலீடு விபரங்களை இருதரப்பும் அளிக்கவில்லை.
மொபைல் வாடிக்கையாளர்கள்
இந்தியாவில் ஸ்மார்ட்போன் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால் பிளிப்கார்ட் நிறுவனம் மொபைல் வாடிக்கையாளர்களை கவர்வதில் அதிகளவிலான கவனத்தை செலுத்தி வருகிறது.
பிளிப்கார்ட்
இதுக்குறித்தி, "இரு நிறுவனங்களின் மத்தியில் நடைபெற்ற நிதி பரிமாற்றம் குறித்த தகவல்களை தற்போது தெரிவிக்க முடியாது என்றாலும், பிளிப்கார்ட் நிறுவனத்தின் மொபைல் தளத்திற்கு வலிமை சேர்க்கும் விதமாக பல நிறுவனங்களை கைபற்ற திட்டமிட்டுள்ளோம்" என பிளிப்கார்ட் தெரிவித்துள்ளது.
பிக் டோட்டா
ஆபிட்டிரேட் நிறுவனம் மொபைல் ஆப்புகளை மேம்படுத்துவதும் மட்டும் அல்லாமல் பிக் டோட்டா துறையிலும் செயல்பட்டு வருகிறது.
பிளிப்கார்ட் நிறுவனத்தின் ஒரு கண் மொபைல் ஆப் பக்கத்தில் இருந்தாலும், மற்றொரு கண் பிக் டோட்டா துறையில் உள்ளது.
முதலீடு
கடந்த 1.5 வருடத்தில் பல முதலீட்டு நிறுவனங்கள் முதலீடு ஆபிட்டிரேட் நிறுவனத்தில் செய்துள்ளது. மேலும் நாட்டின் பல முக்கிய இணைய சேவை நிறுவனத்துடன் பணியாற்றி வருகிறது இந்நிறுவனம்.


Click it and Unblock the Notifications