மீண்டும் ஒரு சாப் நிறுவன அதிகாரியை இன்போசிஸூடன் இணைத்தார் சிக்கா..

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பெங்களூரு: இந்திய மென்பொருள் துறையில் முக்கிய நிறுவனங்களின் ஒன்றான இன்போசிஸ் நிறுவனத்தின் சீஇஓ விஷால் சிக்கா, மீண்டும் ஒரு சாப் நிறுவன அதிகாரியை இன்போசிஸ் நிறுவனத்தில் இணைந்துள்ளார்.

 

சாப் லேப்ஸ் நிறுவனத்தின் கிரியேடிவ் ஹெட்-ஆக பணியாற்றி வரும் ஜேஸன் உல்ஃப் தற்போது இன்போசிஸ் நிறுவனத்தில் இணைந்துள்ளார்.

14 அதிகாரிகள்

14 அதிகாரிகள்

சிக்கா இன்போசிஸ் நிறுவனத்தில் இணைந்த நாள் முதல், இன்று வரை சாப் நிறவனத்தில் மட்டும் சுமார் 14 உயர் மட்ட அதிகாரிகளை இன்போசிஸ் நிறுவனத்தில் இணைத்துள்ளார்.

ஜேஸன் உல்ஃப்

ஜேஸன் உல்ஃப்

இவர் ஆப்பிள் மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனங்களுக்கு முதன் முதலில் மவுஸை வடிவமைத்த ஐடியோ நிறுவனத்தில் பணியாற்றிய பின் சாப் நிறுவனத்தின் இரு முக்கிய பணிகளில் இருந்தார்.

தற்போது சாப் நிறுவனத்தின் தலைமை தொழில்நுட்ப ஆதிகாரியின் அலுவலகத்தில் கிரியேடிவ் ஹெட்-ஆக பணியாற்றி வருகிறார். அதுமட்டும் அல்லாமல் சேர்மன் பிராஜெட் என்ற சிறப்பு குழுவில் முக்கிய பொறுப்பில் உள்ளார்.

இன்போசிஸ்
 

இன்போசிஸ்

சிக்கா தலைமையில் உள்ள இன்போசிஸ் நிறுவனத்தில் ஜேஸன் இணைவதன் மூலம், இந்நிறுவனம் வங்கித்துறை வாடிக்கையாளர்களான பாங்க் ஆஃப் அமெரிக்கா மற்றும் ஜெனரல் எல்க்டிரிக் நிறுவன திட்டங்களில் சந்தித்து வரும் பிரச்சனைகள் தீர்க்கப்படும் என இந்நிறுவனம் நம்புகிறது.

அமெரிக்காவில் ஜேஸன்

அமெரிக்காவில் ஜேஸன்

இன்போசிஸ் நியமனத்திற்கு பின் ஜேஸன் அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ, பே ஏரியாவில் இருந்து செயல்பட உள்ளார். மேலும் இவர் சஞ்சய் ராஜகோபாலன் தலைமையில் பணியாற்ற உள்ளார்.

இவரும் சாப் நிறுவனத்தில் இருந்து இன்போசிஸ் நிறுவனத்திற்கு சிக்கா மூலம் இழுத்து வரப்பட்டவர் தான்.

பணியாளர்களுக்கு பயிற்சி

பணியாளர்களுக்கு பயிற்சி

விஷால் சிக்கா நிறுவன பொறுப்புகளை ஏற்றுக்கொண்ட பின் 176,000 இன்போசிஸ் பணியாளர்கள் டிசைன் திங்கிங் என்ற சிறப்பு படிப்பை முடித்துள்ளனர்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Infosys CEO Vishal Sikka doubles down on design-led strategy with fresh SAP hire

Infosys Chief Executive Vishal Sikka has poached yet another SAP executive and put him in charge of "experience design", marking at least the 14th top-level hire from the German business software maker since he joined in August last year.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X