விட்டதைப் பிடித்தது சாம்சங்... ஸ்மார்ட்போன் விற்பனையில் மீண்டும் முன்னலை!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: உலகளவில் ஸ்மார்ட்போன் மற்றும் மொபைல் விற்பனையில் கொடி கட்டி பறந்த சாம்சங், கடந்த சில ஆண்டுகளாக புதிய நிறுவனங்கள் மற்றும் ஆப்பிள் நிறுவனத்தின் சிறப்பான தயாரிப்புகளின் மூலம் சந்தையில் பின்தங்கி இருந்தது.

 

2015ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டில் சாம்சங் நிறுவனம் புதிய அறிமுகத்தால் சுமார் 82.4 மில்லியன் ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்துள்ளது. இந்த எண்ணிக்கை ஆப்பிள் நிறுவனத்தை விட மிக குறைவு என்பது குறிப்பிடதக்கது.

விற்பனையில் சாம்சங் நிறுவனம், விட்ட இடத்தை பிடித்தாலும், சந்தையில் முதன்மை நிறுவனமாக வலம் வருவது மிகவும் கடினம்.

ஸ்மார்ட்போன் விற்பனை

ஸ்மார்ட்போன் விற்பனை

மார்ச் 31ஆம் தேதியுடன் முடிவடைந்த காலட்டத்தில் சாம்சங் நிறுவனம் சுமார் 82.4 மில்லியன் ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்துள்ளது. இந்நிறுவனத்தின் போட்டி நிறுவனமான ஆப்பிள் இக்காலகட்டத்தில் வெறும் 61.2 மில்லியன் போன்களை மட்டுமே விற்றுள்ளது.

கடந்த நான்கு காலாண்டுகளாக இந்நிறுவனத்தின் விற்பனை அதிகளவில் பாதித்துள்ளது.

சாம்சங் எஸ்6 மற்றும் எஸ்6 எட்ஜ்

சாம்சங் எஸ்6 மற்றும் எஸ்6 எட்ஜ்

ஆப்பிள் நிறுவனத்தின் தயாரிப்பான ஐபோன் 6 மற்றும் 6 பிளஸ் போன்களுக்கு போட்டியாக சாம்சங் வெளியிட்ட புதிய மாடல் போன்கள் சந்தையில் வெற்றிப்பெற்றுள்ளது.

இதன் காரணமாகவே இன்நிறுவனத்தின் விற்பனை அதிகரித்துள்ளது.

வருவாய்

வருவாய்

இக்காலாண்டில் சாம்சங் நிறுவனத்தின் மொத்த வருவாய் 4.3 பில்லியன் டாலராகும், இது கடந்த ஆண்டை விடவும் 39 சதவீதம் குறைவாகும்.

வர்த்தகம்
 

வர்த்தகம்

கடந்த காலாண்டில் இந்நிறுவனத்தின் விற்பனை மந்தமாக இருந்த காலத்தில் இந்நிறுவனத்தின் வர்த்தகத்தை ஹூவே மற்றும் ஜியோமி அதிகளவில் கைபற்றியது குறிப்பிடதக்கது.

ஆப்பிள்

ஆப்பிள்

சாம்சங் நிறுவனத்தின் புதிய தயாரிப்புகளின் வெளியீட்டின் மூலம் சுமார் ஆப்பிள் நிறவனத்தின் விற்பனை அதிகளவில் பாதித்தது.

ஆனால் சீனாவில் கடந்த ஒரு வருடத்தில் ஆப்பிள் நிறுவனத்தின் விற்பனை சுமார் 72 சதவீதம் அதிகரித்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Samsung reclaims the smartphone crown from Apple

Samsung has clawed back its crown from Apple as the world's biggest smartphone seller by volume, but it still has a long way to go to reclaim its golden years.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X