பெங்களூரு: நாட்டின் முன்னணி மென்பொருள் நிறுவனமான விப்ரோ, தனது நிதிநிலையை மேம்படுத்தவும், புதிய தொழில்நுட்பத்தில் இறங்கவும் திட்டமிட்டுள்ளதால் 300 மில்லியன் டாலர் செலவீன குறைப்புத் திட்டத்தில் இறங்க உள்ளதாக இந்நிறுவனத்தின் சீஇஓ டி.கே.குரியன் தெரிவித்தார்.
விப்ரோ நிறுவனத்தின் நிர்வாகத் தலைவர்கள் கூட்டம் கோயம்புத்தூரில் நடந்தது, இதில் விப்ரோ செயல்படுத்த உள்ள 300 மில்லியன் டாலர் செலவீன குறைப்புத் திட்டத்தைத் தலைமை செயல் அதிகாரியான அபிட் அலி தலைமையில் செயல்படுத்த உள்ளதாகக் குரியன் தெரிவித்தார்.
பணியாளர்கள் எண்ணிக்கை
இந்நிறுவனம் ஆட்டோமேஷன் மற்றும் செயற்கை நுண்ணறிவு ஆகிய துறையில் சிறந்து விளங்கவும், குறிப்பிட்ட பிராஜெக்ட்டில் பணியாளர்கள் எண்ணிக்கை குறைக்கவும் நிர்வாகம் முடிவு செய்துள்ளதாகக் குரியன் தெரிவித்தார்.
அபிட் அலி
300 மில்லியன் டாலர் செலவீன குறைப்புத் திட்டத்தை டிசிஎஸ் நிறுவனத்தில் இருந்து வெளியேறி விப்ரோ-வில் இணைந்த அபிட் அலி நெமுச்வாலா தலைமையில் செயல்படுத்த விப்ரோ நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
மேலும் இந்தத் திட்டத்தைத் தீட்டியவர் அபிட் அலி என்பது குறிப்பிடத்தக்கது.
300 மில்லியன் டாலர்
இந்த 300 மில்லியன் டாலர் என்பது விப்ரோ நிறுவனத்தின் வருவாயில் 5 சதவீதமாகும். இத்திட்டத்தைச் செயல்படுத்துவதன் மூலம் நிறுவனத்தின் லாப அளவு மற்றும் செயல் திறன் அதிகரிக்கும் என விப்ரோ நம்புகிறது.
விப்ரோ
இன்போசிஸ், டிசிஎஸ், நிறுவனங்களைப் போலவே விப்ரோவும் அடுத்தத் தலைமுறை டெக்னாலஜிகளில் இறங்கியுள்ளது. இதன் மூலம் சந்தையில் இந்நிறுவனங்களுக்கு மத்தியில் அதிகளவிலான போட்டி உருவாகும்.
செலவீன குறைப்பு
இந்தச் செலவீன குறைப்பின் மூலம் நிறுவனத்தில் பணியாளர்கள் சேர்ப்பு அதாவது Hiring நடவடிக்கை குறைய வாய்ப்புள்ளது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!



Click it and Unblock the Notifications