டெல்லி: டிராய் அமைப்பின் கட்டண குறைப்பு அறிவிப்பிற்குப் பின், மத்திய தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல், தனது ப்ரீபெய்டு மற்றும் போஸ்ட்பெய்டு வாடிக்கையாளர்களின் மொபைல் ரோமிங் கட்டணத்தைச் சுமார் 40 சதவீதம் குறைத்துள்ளது.
இந்தக் கட்டண குறைப்பு மே 1ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளதாகப் பிஎஸ்என்எல் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கட்டண குறைவு
மத்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் அமைப்பின் அறிவிப்பிற்குப் பின் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் கால் கட்டணங்கள் 40 சதவீதமும், எஸ்டிடி கட்டணங்கள் 23 சதவீதமும், லோக்கல் கால் கட்டணங்கள் 20 சதவீதமும் குறைத்துள்ளது.
எஸ்எம்எஸ் கட்டணங்கள்
இதனுடன் லோக்கல் மற்றும் தேசிய எஸ்எம்எஸ் கட்டணங்களும் 75 சதவீதம் குறைந்துள்ளது.
பிஎஸ்என்எல்
இந்நிறுவனம் தனது வாடிக்கையாளர் எண்ணிக்கையை உயர்த்த லேண்டுலைன் வாடிக்கையாளர்களுக்குப் புதிய சலுகையைச் சில வாரங்களுக்கு முன்பு அறிவித்து.
இதன்படி மே 1ஆம் தேதி முதல் இரவு 9 மணி முதல் காலை 7 மணி வரையிலான நேரத்தில் பிஎஸ்என்எல் லேண்டுலைன் டூ லேண்டுலைன் சேவையை இலவசமாக அறிவித்துள்ளது. இந்தத் திட்டமும் மே 1 முதல் அமலுக்கு வந்துள்ளதாக இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
பிற நிறுவனங்கள்
பிஎஸ்என்எல் நிறுவனத்தைப் போலவே ஏர்டெல், வோடபோன், ஐடியா செல்லுலார் ஆகிய நாட்டின் முன்னணி மொபைல் சேவை நிறுவனங்களும் கட்டணத்தைக் குறைத்துள்ளது.


Click it and Unblock the Notifications