டெல்லி: 2014-15ஆம் நிதியாண்டில், மத்திய நிதியமைச்சரான அருண் ஜேட்லி நிர்ணயம் செய்த வரி வசூல் இலக்கை எட்டமுடியாமல் 14 சதவீத சரிவுடன் வருமான வரித்துறை தவித்து வருகிறது.
இதன் மூலம் நாட்டின் நேரடி வரி வசூல் அளவு 6.96 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது.
வருமான வரித் துறை..
மார்ச் 31, 2015ஆம் தேதி முடிவில் நேரடி வரிப் பிரிவின் கீழ் உள்ள பல்வேறு வருமான வரி மற்றும் கார்ப்பரேட் வரி மூலம்நிதியமைச்சகம் சுமார் 6,96,200 கோடி ரூபாய் வரி வசூல் செய்துள்ளது.
இலக்கு
2014ஆம் நிதியாண்டில் மோடி தலைமையிலான மத்திய அரசு ஆட்சிக்கு வந்த உடன், நிதியமைச்சர் அருண் ஜேட்லிநாட்டின் மந்தமான பொருளாதார நிலையைக் கணக்கில் கொண்டு 2014-15ஆம் நிதியாண்டுக்கான வரி வசூல் அளவை7,05,000 கோடி ரூபாயாகக் குறைந்தார்.
தற்போது இலக்கை அடைய 9,000 கோடி ரூபாய் வசூலில் வருமான வரித்துறை பின்தங்கியுள்ளது.
5,83,000 கோடி ரூபாய்
நிதியமைச்சகம், வரி வசூல் இலக்கை தவறவிட்டாலும், கடந்த நிதியாண்டை ஒப்பிடுகையில் வரி வசூல் அளவு 19 சதவீதஉயர்வைச் சந்தித்துள்ளது.
2013-14ஆம் நிதியாண்டில் நாட்டின் நேரடி வரி வசூல் அளவு 5,83,000 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
மந்தமான வளர்ச்சி
நாட்டின் மந்தமான வளர்ச்சியின் காரணமாக வரி வசூல் இலக்கை மத்திய அரசு, 7.36 லட்சம் கோடி ரூபாயில் இருந்து 3.05கோடியாக மாற்றியது.
கடந்த நிதியாண்டில் சேவைத்துறையில் அதிகப்படியான முதலீடு பெற்றிருந்தாலும், இத்துறையின் வளர்ச்சி மிகவும்குறைவாகவே இருந்தது. இதன் காரணமாகவும், வரி வசூல் அளவு அதிகளவில் பாதித்துள்ளது.


Click it and Unblock the Notifications