டெல்லி: ஏப்ரல் மாதத்தில் உள்நாட்டுத் தேவை அதிகளவில் குறைந்ததால் உற்பத்திக்கான ஆர்டர்கள் குறைந்துள்ளது. இதனால் நாட்டின் உற்பத்தி துறை மிதமான வேகத்தில் இருந்தததாக எச்எஸ்பிசி ஆய்வுகள் தெரிவிக்கிறது.
நாட்டின் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி அளவை அதிகரிக்க ரிசர்வ் வங்கி தனது அடுத்த இருமாத மறுஆய்வுக் கொள்கையில் வட்டி குறைப்பை அறிவிக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
உற்பத்தியில் சரிவு
மார்ச் மாதத்தில் சிறப்பான வளர்ச்சி அடைந்த நாட்டின் உற்பத்தி அளவு, ஏப்ரல் மாதத்தில் சரிவை கண்டது.இக்காலகட்டத்தில் சில துறைகளில் வேலை இழப்பு மற்றும் சில நிறுவனங்களில் செலவுக் குறைப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டது.
பிஎம்ஐ குறியீடு
எச்எஸ்பிசி இந்தியா, மார்கிட் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்த கொள்முதல் மேலாளர்கள் குறியீட்டின் (PMI) அளவு 51.3ஆக உள்ளது. மார்ச் மாதத்தில் இதன் அளவு 52.1 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.
பிஎம்ஐ குறியீடு 50 புள்ளிகளுக்கு அதிகமாக இருக்கும்பட்சத்தில் நாட்டின் உற்பத்தி அளவு வளர்ச்சி பாதையில் உள்ளதாகப் பொருள்.
ஆர்டர் எண்ணிக்கை சரிவு
சர்வதேச நாடுகளின் போட்டிகள் மற்றும் உள்நாட்டு தேவையில் சரிவு ஆகிய காரணங்களால், கடந்த மார்ச் மாதத்தில் இருந்தே இந்திய சந்தையில் உற்பத்திக்கான ஆர்டர்கள் எண்ணிக்கை குறைந்து வருகிறது.
ஏப்ரல் மாதம்
டாலர் மதிப்பு உயர்வு மற்றும் பன்னாட்டு நிறுவனங்களின் குறைவான லாப அளவு ஆகிய காரணங்களால் நாட்டின் வளர்ச்சி, ஏப்ரல் மாதத்தில் சற்று குறைவாகவே இருந்து.


Click it and Unblock the Notifications