1,000 பணியாளர்களை வீட்டிற்கு அனுப்ப சின்டெல் நிறுவனம் முடிவு.. சென்னையில் மட்டும் 300 பேர்...

சென்னை: இன்றைய நிலையில் ஐடி நிறுவனங்களின் பணியாளர்களை வெளியேற்றுவது மிகவும் சாதரானகாரியமாகிவிட்டது. குறிப்பாகப் பெரும் நிறுவனங்களில் தங்களது நிதிநிலையை மேம்படுத்த ஆயிரக்கணக்கானபணியாளர்களைச் சர்வசாதாரணமாக வெளியேற்றுகின்றனர்.

இதன்படி தற்போது அமெரிக்க ஐடி நிறுவனமான சின்டெல், தங்களது நிறுவனத்தில் எதிர்பார்ப்புகளுக்கு இணங்க வேலைசெய்யாதவர்கள் என்ற பெயரில் 1,000க்கும் அதிகமான பணியாளர்களை வீட்டிற்கு அனுப்பி வருகிறது.

டிசிஎஸ் விவகாரம்

டிசிஎஸ் விவகாரம்

ஐடித்துறை பணியாளர்கள் மத்தியில், டிசிஎஸ் வெளியேற்ற நடவடிக்கையின் பின் பணியாளர்கள் வெளியேற்றத்தைஎதிர்க்கப் பல அமைப்புகள் உருவாகியுள்ளது. குறிப்பாகச் சென்னையில் அதிகளவிலான அமைப்புகள் உருவாகி இருப்பதுகுறிப்பிடத்தக்கது.

இதில் என்டிஎல்எப் (New Democratic Labour Front) அமைப்பும் ஒன்று.

 

என்டிஎல்எப்

என்டிஎல்எப்

இந்த அமைப்புத் திங்கட்கிழமை வெளியிட்ட அறிக்கையில், அமெரிக்க நிறுவனமான சின்டெல் முறையற்ற வகையில்1,000 பணியாளர்களை நிறுவனத்தை விட்டு வெளியேற்ற உள்ளதாகவும், சின்டெல் நிர்வாகம் பணியாளர்களை ராஜினாமாகடிதத்தை அளிக்குமாறு நிர்மந்தம் செய்வதாகத் தெரிவித்திருந்தது.

சின்டெல் பதில்

சின்டெல் பதில்

இதற்குச் சின்டெல் நிறுவனம் கூறுகையில், "நிறுவனத்தில் சரியாக வேலை செய்யாத பணியாளர்களை வெளியேற்றும்நடவடிக்கை நடைபெறுவது உண்மை தான், ஆனால் 1000 பணியாளர்கள் என்பது உண்மையல்ல" என்று தெரிவித்துள்ளது.

இந்தியாவில் மட்டும் ஆயிரம்

இந்தியாவில் மட்டும் ஆயிரம்

இந்நிறுவனம் இந்தியாவில் சென்னை, மும்பை, புனே மற்றும் பல இடங்களில் செயல்பட்டு வருகிறது. இந்த அனைத்துஅலுவலகங்களிலும் ஆட்குறைப்பு நடவடிக்கையைக் கட்டவிழ்த்து உள்ளது சின்டெல் நிர்வாகம்.

சென்னை

சென்னை

இந்த 1,000 பணியாளர்கள் எண்ணிக்கையில் சென்னை அலுவலகத்தில் மட்டும் சுமார் 300 பணியாளர்களை வெளியேற்றசின்டெல் திட்டமிட்டுள்ளது.

3,000 பணியாளர்கள்

3,000 பணியாளர்கள்

என்டிஎல்எப் அமைப்பின் கணிப்புகள் சரியான இருந்தால், சின்டெல் நிதிநிலை மற்றும் வாடிக்கையாளர்கையை ஒப்பிட்டுப்பார்க்கும்போது இந்நிறுவனத்தில் 3,000க்கும் அதிகமான பணியாளர்கள் வெளியேற்றப்படுவார்கள் என இந்த அமைப்பின்ஒருங்கிணைப்பாளர் கற்பகவிநாயகம் தெரிவித்தார்.

புகார்

புகார்

இதுவரை எந்த ஒரு அமைப்பிலும் இந்நிறுவனத்திற்கு எதிராகப் பணியாளர்கள் புகார் அளிக்கவில்லை என்று கற்பகவிநாயகம் வருத்தம் தெரிவித்துள்ளார்.

சட்ட திட்டங்கள்

சட்ட திட்டங்கள்

என்டிஎல்எப் அமைப்புச் சென்னை உயர் நிதிமன்றத்தில், ஐடி நிறுவனங்களை, தொழிற்துறை முரண்பாட்டு சட்டத்தின்(Industrial Disputes Act) கீழ் கொண்ட வர மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை ஏற்ற நிதிமன்றம், தமிழ்நாட்டு அரசை வரைவாக ஐடி நிறுவனங்களைத் தொழிற்துறை முரண்பாட்டுசட்டத்தின் கீழ் கொண்டு வருவதற்கான நடவடிக்கையை எடுக்க அறிவுறுத்தியுள்ளது.

 

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+