ஸ்டார்ட்அப் நிறுவனங்களில் முதலீடு செய்யக் காத்துக்கிடக்கும் இன்போசிஸ்!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பெங்களூரு: நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய மென்பொருள் நிறுவனமான இன்போசிஸ், அடுத்தத் தலைமுறை டெக்னாலஜிகளில் அதிகக் கவனம் செலுத்தி வருவகிறது.

புதிய ஐடியாக்கள் மற்றும் புதிய தொழில்நுட்பத்தில் பணியாற்றும் 6 ஸ்டாட்அப் நிறுவனங்களில் முதலீடு செய்யத்தயாராக உள்ளதாகத் தெரிவித்துள்ளது.

6 நிறுவனங்கள்

6 நிறுவனங்கள்

தற்போதை நிலையில் இன்போசிஸ், 6 துவக்க நிறுவனங்கள் அதாவது ஸ்டாட்அப் நிறுவனங்களில் 10 -25 மில்லியன் டாலர்முதலீடு செய்யத் தயாராக உள்ளதாக அறிவித்துள்ளது.

250 மில்லியன் டாலர்

250 மில்லியன் டாலர்

மேலும் விஷால் சிக்கா தலைமையிலான இன்போசிஸ் நிர்வாகம், இந்தியாவில் உள்ள துவக்க நிறுவனங்களில் முதலீடுசெய்வதற்காகவே சுமார் 250 மில்லியன் டாலர் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

இதற்காகப் புதிய மற்றும் சிறந்த நிறுவனங்களைக் கண்டறிந்து முதலீடு செய்ய மென்பொருள் ஆய்வு நிறுவனமானஐஸ்பிரிட் நிறுவனத்துடன் இணைந்துள்ளது.

 

வெளிநாட்டு நிறுவனங்கள்

வெளிநாட்டு நிறுவனங்கள்

இந்தியாவில் உள்ள சிறந்த மற்றும் நிறுவனத்தை அடுத்தக் கட்டத்திற்குக் கொண்டு செல்லும் தொழில்நுட்பநிறுவனங்களில் முதலீடு செய்ய இன்போசிஸ் 250 மில்லியன் டாலர் ஒதுக்கியது போல், வெளிநாட்டு நிறுவனங்களிலும்முதலீடு செய்ய 250 மில்லியன் டாலர் நிதி ஒதுக்கியுள்ளது.

புதிய அதிகாரிகள்

புதிய அதிகாரிகள்

500 மில்லியன் டாலர் தொகையைத் தக்க நிறுவனங்களில் முதலீடு செய்யவும், நிர்வாகம் செய்யவும் இன்போசிஸ் இரண்டுபுதிய அதிகாரிகளை நியமித்துள்ளது.

இதில் ஒருவர் யூசப் பஷிர் (அவர் அமெரிக்காவில் இருந்து செயல்பட உள்ளார்), மற்றொருவர் இன்போசிஸ் நிறுவனத்தின்இன்னோவேஷன் எக்கோசிஸ்டம் பிரிவின் துணைத் தலைவர் கவுஸ்தவ் மித்ரா ஆகியோர் ஆவார்.

100 நிறுவனங்கள்

100 நிறுவனங்கள்

இன்போசிஸ் நிறுவனத்தின் இரு அதிகாரிகள் மற்றும் ஐஸ்பிரிட்ஸ் நிறுவனம் கூட்டணி இணைந்து தற்போது 100 துவக்கநிறுவனங்களைப் பட்டியலிட்டுள்ளது.

இந்த நிறுவனங்கள் அனைத்தும் உலகின் முன்னணி நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது.

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Infosys weighing six startups for investment, aims to park $10-25 million per company

Infosys is evaluating at least half a dozen early stage startups in India for investments, signaling its intentions to tap into India's evolving software products ecosystem.
Story first published: Wednesday, May 6, 2015, 17:45 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X