19 அன்னிய முதலீட்டுத் திட்டங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல்..

டெல்லி: வெளிநாட்டு முதலீட்டு மேம்பாட்டு வாரியம் கடந்த ஏப்ரல் 9ஆம் தேதி நடத்திய முக்கியக் கூட்டத்தில் பன்னாட்டுநிறுவனங்களின் அன்னிய முதலீட்டுத் திட்டங்களை ஆய்வு செய்து, சில முக்கியத் திட்டங்களை மட்டும் மத்திய அரசின்அனுமதிக்காக இவ்வமைப்புப் பரிந்துரை செய்தது.

இதன் படி செவ்வாய்க்கிழமை, பரிந்துரைகளை ஆய்வு செய்த மத்திய அரசு, 2,165.04 கோடி ரூபாய் மதிப்பிலான 19 அன்னியமுதலீட்டுத் திட்டங்களுக்கு மட்டும் ஒப்புதல் அளித்துள்ளது.

இதில் பார்தி ஆக்சா கூட்டணியின் 1,300 கோடி ரூபாய் மதிப்பிலான அன்னிய முதலீட்டுத் திட்டமும் அடக்கம்.

பார்தி ஆக்சா லைப் இன்சூரன்ஸ்

பார்தி ஆக்சா லைப் இன்சூரன்ஸ்

மத்திய அரசு ஒப்புதல் அளித்த 19 அன்னிய முதலீட்டுத் திட்டங்களில் அதிக மதிப்புடையது பார்தி ஆக்சா லைப் இன்சூரன்ஸ்நிறுவனத்துடையது தான்.

பார்தி இன்சூரன்ஸ் ஹோல்டிங்ஸ் வைத்திருக்கும் 26.78 சதவீத பங்குகளைக் கைப்பற்ற ஆக்சா இந்தியா ஹோல்டிங்ஸ்நிறுவனத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது.

இப்பங்குகளின் மதிப்பு 858.60 கோடி ரூபாயாகும்.

 

பார்தி ஆக்சா ஜென்ரல் இன்சூரன்ஸ்

பார்தி ஆக்சா ஜென்ரல் இன்சூரன்ஸ்

பார்தி ஆக்சா ஜென்ரல் இன்சூரன்ஸ் கூட்டணி நிறுவனத்தின் 26.78 சதவீத பங்குகளை வைத்திருக்கும் பார்தி இன்சூரன்ஸ்ஹோல்டிங்ஸ் நிறுவனத்திடம் இருந்து SocieteBeaujon நிறுவனம் பங்குகளைக் கைப்பற்ற மத்திய அரசு ஒப்புதல்அளித்துள்ளது.

இப்பங்குகளின் மதிப்பு 431.40 கோடி ரூபாயாகும்.

 

பிற நிறுவனங்கள்

பிற நிறுவனங்கள்

மத்திய அரசு அனுமதி அளித்த பிற நிறுவனங்களில், மைலேன்லேப்ஸ் (128.77 கோடி ரூபாய்), பார் ஃபார்முலேஷன்ஸ் (124கோடி ரூபாய்), டச்ஸ்டோன் டிரஸ்ட் (29 கோடி ரூபாய்), அகுரி வைர்லெஸ் பிராட்பேண்ட் (9 கோடி ரூபாய்), குராடியோஹெல்த்கேர் இந்தியா (93.43 கோடி ரூபாய்), ஆர்எல்ஜி ரிடைல் (31 கோடி ரூபாய்) மற்றும் எப்சிசி கிளட்ச் இந்தியா (444.50கோடி ரூபாய்) ஆகியவை அடக்கம்.

பார்தி குழுமம்

பார்தி குழுமம்

திங்கட்கிழமை இக்குழுமத்தின் சில்லறை வர்த்தக நிறுவனமான பார்தி ரீடைல் நிறுவனம் அதிகளவிலான நஷ்டத்தைச்சந்தித்துள்ள நிலையில் ப்யூச்சர் ரிடைல் நிறுவனத்துடன் இணைத்துள்ளது.

இதன் மூலம் இந்நிறுவனங்களின் வர்த்தகம் 15,000 கோடி ரூபாய் அளவு உயரும்.

 

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+