மும்பை: இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் ஈகாமர்ஸ் சந்தை, 2030ஆம் ஆண்டுக்குள் 15 மடங்கு உயர்ந்து 300 பில்லியன் டாலர் வர்த்தகத்தை எட்டும் என கோல்ட்மேன் சாக்ஸ் ஆய்வு அறிக்கை தெரிவித்துள்ளது.
மேலும் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி அளவில், ஈகாமர்ஸ் சந்தை 2.5 சதவீத்தை பெறும் என இந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
20 பில்லியன் டாலர் வர்த்தகம்
தற்போதைய நிலையில் ஈகாமர்ஸ் சந்தையின் அளவு 20 பில்லியன் டாலராகும்.
இந்திய சந்தையில் உள்ள பிளிப்கார்ட், அமேசான், ஸ்னாப்டீல், ஜபாங் போன்ற நிறுவனம் அதிக லாபம் பெற போட்டிபோட்டு வரும் நிலையில், பன்னாட்டு நிறுவனங்களான அலிபாபா போன்றவையும் இந்தியாவிற்குள் நுழைய ஆர்வம்காட்டி வருகிறது.
கோல்ட்மேன் சாக்ஸ்
இந்தியாவில் மலிவான விலையில் ஸ்மார்ட்போன், தொடர்ந்து மேம்பட்டுவரும் உள்கட்டமைப்பு மற்றும் ஆன்லைன் பரிமாற்றத்தில் உள்ள தெளிவு ஆகிய காரணங்களால் இத்துறையை 300 பில்லியன் டாலர் அளவிற்கு உயர்த்தும் எனக் கோல்ட்மேன் சாக்ஸ் நிறுவனம் வெளியிட்ட ஆய்வு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
ஆன்லைன் ஷாப்பர்ஸ்
உலக நாடுகளில் அதிகளவிலான இளைஞர்கள் கொண்டுள்ள நாடுகளில் ஒன்று இந்தியா. இந்நிலையில் அடுத்த 15 வருடத்தில் இந்தியாவில் மட்டும் சுமார் 300 மில்லயன் எண்ணிக்கையில் புதிய ஆன்லைனில் வர்த்தக வாடிக்கையாளர்கள்உருவாக உள்ளனர்.
இதனால் இந்தியாவில் ஈகாமர்ஸ் சந்தை புதிய உச்சத்தை எட்ட உள்ளது.
பில்லியன் டாலர் கம்பனி
மேலும் இந்தியாவில் தற்போது ஆன்லைன் சில்லறை வர்த்தகம், ஆன்லைன் டிராவல், டிஜிட்டல் விளம்பரம், எல்க்ட்ரானிக் பரிமாற்றம் ஆகிய துறைகளில் ஈடுப்பட்டுள்ள நிறுவனங்கள் 2030ஆம் ஆண்டுக்குள் பில்லியன் டாலர் நிறுவனமாக மாறும் எனக் கோல்ட்மேன் சாக்ஸ் தெரிவித்துள்ளது.
டிஜிட்டல் மக்கள்தொகை
இந்தியாவில் 2030ஆம் ஆண்டுக்குள் இண்டர்நெட் பயன்பாட்டாளர்கள் எண்ணிக்கை 1 பில்லியனாக உயரும் என இந்த ஆய்வு முடிவுகளின் கணிப்புகள் தெரிவிக்கிறது.
6 பில்லியன்
2014ஆம் ஆண்டில், ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களில் தனியார் நிறுவனங்களின் முதலீடு மட்டும் 6 பில்லியன் டாலராகும். இதுவே இத்துறை வளர்ச்சிக்கு முக்கியச் சான்றாகும்.
More From GoodReturns

ஈரான் போர்: கதிகலங்கி நிற்கும் தைவான்.. 11 நாட்கள் கெடு..!!

எல்பிஜி தட்டுப்பாட்டுக்கு முடிவு: இந்தியாவுக்கு வரும் 92,700 மெட்ரிக் டன் கேஸ்.. மத்திய அரசு அறிவிப்பு!!

என்னப்பா புது புது பிரச்சனையா கிளம்புது.. ஈரான் போரால் 'இந்த' பொருட்கள் விலை தாறுமாற உயரபோகுது..!!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

இந்தியர்கள் உடனே வெளியேறலாம்; நாங்களே டிக்கெட் போட்டு தரோம்: அமெரிக்க அரசின் அட்டூழியம்

ஈரான் போரில் டிரம்ப் போடும் கணக்கே வேற..! குறி வச்சது கமேனிக்கு இல்ல..! வெளிவரும் உண்மை..!

டிரம்ப் அடித்த அந்தர் பல்டி.. ஈரான் மீதான தடை நீக்கம்.. எல்லாம் தலைகீழாக மாறுதே..!!

இந்திய மக்களை துரத்தும் புதிய பிரச்சனை.. ஈரான் போர் மூலம் உங்க பர்ஸ்-க்கு வேட்டு..!!

தங்கம் விலை 7 மடங்கு! வெள்ளி விலை 2.5 மடங்கு அதிகரிக்க வாய்ப்பு! ராபர்ட் கியோசாகி அதிரடி கணிப்பு!

சென்செக்ஸ், நிஃப்டியை புரட்டிப்போட்ட 90 நிமிடம்.. என்ன நடந்தது..? முழுக்க முழுக்க மேஜிக்

ஈரான் போரில் பாகிஸ்தானுக்கு மறைமுக பங்கு: வெளிச்சத்திற்கு வந்தது பாகிஸ்தானின் இரட்டை வேடம்!!



Click it and Unblock the Notifications