கனடா: உள்நாட்டு விமான நிறுவனங்களின் அதிகப்படியான சலுகை மற்றும் தள்ளுபடி திட்டங்களால் இந்திய சந்தையில் விமானப் பயணிகள் எண்ணிக்கை மார்ச் மாதம் 18 சதவீதம் உயர்ந்துள்ளதாகச் சர்வதேச விமானப் போக்குவர்த்துக் கழகம் (IATA) தெரிவித்துள்ளது.
உலகளவிலான பயணிகள் எண்ணிக்கையை ஒப்படுகையில் இந்தியா 2 மடங்கு உயர்வைச் சந்தித்துள்ளது.
உள்நாட்டுப் பயணிகள்
மார்ச் மாதத்தில் உள்நாட்டுப் பயணிகள் எண்ணிக்கையை, கடந்த வருடத்தை ஒப்பிடும் போது 8 சதவீதம் அதிகமாகும். இந்தியாவில் கடந்த சில மாதங்களாக விமானப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது.
இதனால் விமான நிறுவனங்கள் மற்றும் விமான நிலையங்களும் விரிவக்கம் செய்யத் திட்டமிட்டு வருகிறது.
சீனா
விமானப் பயணிகள் எண்ணிக்கை வளர்ச்சியில் இந்தியாவை விடச் சீன முன்னணியில் உள்ளது.
மார்ச் மாதத்தில் சீனாவில் விமானப் பயணிகள் எண்ணிக்கை 22 சதவீதம் அதிகரித்துள்ளதாக IATA தெரிவித்திள்ளது. அதேபோல் பிரேசில் நாட்டிலும் பயணிகள் எண்ணிக்கை 9.2 சதவீதம் அதிகரித்துள்ளது.
250 விமான நிறுவனங்கள்
சர்வதேச சந்தையில் 84 சதவீத விமானப் பயணங்களை உலகின் முன்னணி 250 விமான நிறுவனங்கள் மட்டும் பெற்றுள்ளதாகவும் IATA தெரிவித்துள்ளது.
மீதமுள்ள நிறுவனங்கள் மிகவும் குறைவான வாடிக்கையாளர்கள் எண்ணிக்கையே கொண்டுள்ளது.
பொருளாதார நிலை
மார்ச் மாதத்தில் ஆசிய -பசிபிக் சந்தையில் பொருளாதார நிலை மந்தமாக இருந்ததால் இப்பகுதிகளில் விமானப் பணிகளின் எண்ணிக்கை வளர்ச்சி பாதித்துள்ளது.
ஐரோப்பா பொருளாதாரம்
ஐரோப்பா சந்தையில் பொருளாதார நிலை மிகவும் மோசமாக உள்ள காரணத்தினால், விமானச் சேவையில் மிகப்பெரிய பாதிப்பு உருவாகியுள்ளது.
இந்தியா
ஏவியேஷன் சந்தையின் படி, இந்தியாவில் விமானச் சேவை மேம்படுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகளவில் உள்ளதாகத் தெரிவித்துள்ளது. மோடி தலைமையிலான அரசு ஸ்திரதன்மை வாய்ந்ததாக உள்ளதால், அனைத்துத் துறை வளர்ச்சிக்கும் இந்தியா ஏற்றதாக உள்ளது.
தமிழ் குட்ரிட்டன்ஸ்
இனி தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்தை சமுக வலைதளங்கள் மூலம் இணைந்திடலாம். பேஸ்புக், டிவிட்டர் மற்றும் கூகிள் பிள்ஸ்.


Click it and Unblock the Notifications