ஒரே நாளில் 630 மில்லியன் டாலர் முதலீடு காலியானது!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை: அன்னிய போர்ட்ஃபோலியோ முதலீட்டாளர்களின் முதலீட்டுக் குறைப்புப் புதன்கிழமை இந்திய சந்தையில் உச்சம் பெற்றிருந்தது.

 

ஓரே நாளில் 630 மில்லியன் டாலர் மதிப்பிலான பங்கு மற்றும் பத்திரங்களை விற்று பங்குச் சந்தையைப் பாதாளத்திற்குக் கொண்டு சென்றனர்.

கடந்த ஜனவரி 2014ஆம் வருடத்திற்குப் பின் புதன்கிழமையன்று அதிக மதிப்பிலான பங்குகள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாகப் பங்குச் சந்தை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏன் இந்த நிலை?

ஏன் இந்த நிலை?

அன்னிய போர்ட்ஃபோலியோ முதலீட்டாளர்கள் (FPI) இந்திய சந்தையில் செய்த முதலீட்டுக்கான வரியை செலுத்த வருமான வரித்துறை நிர்பந்தம் செய்ததால், முதலீட்டாளர்கள் தங்களது இருப்பைக் குறைத்துக் கொண்டனர்.

மாட் வரி

மாட் வரி

இந்திய நிறுவனங்கள் FPI-களுக்கு அளித்த போனஸ் பங்குகள் மற்றும் பங்கு பரிமாற்றத்திற்கான மினிமம் ஆல்டர்நேடிவ் டாக்ஸ் (MAT) செலுத்த வருமான வரித்துறை, முதலீட்டாளர்களுக்கு நோட்டிஸ் அளித்தது.

முதலீட்டுக் குறைப்பு

முதலீட்டுக் குறைப்பு

இதன் காரணமாகக் கடந்த 4 நாட்களாக இந்தியா சந்தையில் இருந்து முதலீடு அதிகளிவில் முதலீட்டாளர்கள் குறைத்தனர். இதன் உச்சக்கட்டமாகப் புதன்கிழமை 630 மில்லியன் டாலர் மதிப்பிலான பங்குகள் மற்றும் பத்திரங்கள் இந்திய சந்தையில் விற்கப்பட்டுள்ளது.

877 மில்லியன் டாலர்
 

877 மில்லியன் டாலர்

இதேபோன்ற நிலை ஜனவரி 27, 2014ஆம் வருடம் உருவானது.

அமெரிக்கப் பெடரல் ரிசர்வ், அரசு பத்திரங்களுக்கான வட்டி வகிதத்தை உயர்த்துவதாக அறிவித்ததன் மூலம் உலக நாடுகள் இந்திய சந்தையில் செய்த முதலீட்டை அதிகளவில் குறைத்தது.

இதன் எதிரொலியாகச் சுமார் 877 மில்லயன் டாலர் அளவு முதலீடு குறைந்ததாகப் பங்குச் சந்சை அறிக்கை தெரிவித்துள்ளது.

வெள்ளிக்கிழமை வர்த்தகம்

வெள்ளிக்கிழமை வர்த்தகம்

மத்திய அரசு, மாட் வரி விதிப்பில் ஆய்வு செய்வதாக வியாழக்கிழமை மாலை அறிவித்ததை அடுத்து வெள்ளிக்கிழமை வர்த்தகத்தில் பங்குச்சந்தையில் முதலீடு குவிந்தது. இதன் மூலம் சென்செக்ஸ் 480 புள்ளிகள் வரை உயர்ந்தது குறிப்பிடத்தக்கது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Falling out of love, foreign funds dump Indian shares, bonds

Overseas funds sold around a net $630 million in Indian shares and bonds on Wednesday, marking their biggest single-day sales since January 2014, reinforcing fears that an emerging market darling is losing its allure.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X