டெல்லி: நாட்டின் முன்னணி தனியார் விமானப் போக்குவரத்து நிறுவனமான ஜெட் ஏர்வேஸ், இந்தியாவில் சரக்கு விமானப் போக்குவரத்தை துவங்கியுள்ளது.
இந்நிறுவனத்தின் முக்கிய வாடிக்கையாளர்களுக்கு மட்டும் அவசர கால டெலிவரி திட்டமாகக் குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் இச்சேவையை அளிக்க ஜெட் ஏர்வேஸ் முடிவு செய்துள்ளது.
ஜெட் ஏர்வேஸ்
இந்நிறுவனத்தின் சரக்கு விமானப் போக்குவரத்து சேவையில் அதிக எடையுள்ள பொருட்களுக்கு முதல் உரிமை அளிக்கப்படுகிறது.
மேலும் வாடிக்கையாளர்களுக்கு நம்பிக்கையூட்டும் வகையில் பொருட்களை டெலிவரி செய்ய முடியவில்லை என்றால் மொத்த பணம் திருப்பிக் கொடுப்பதாகத் தெரிவித்துள்ளது.
ராஜ் சிவக்குமார்
இந்தியாவில் எங்களது விமான இயக்கம் மற்றும் வழித்தடங்கள் அதிகம் உள்ள நிலையில், நிறுவனத்தின் முக்கிய வாடிக்கையாளர்களுக்குப் பயன்படும் வகையில் நம்பிக்கையான விமானச் சரக்குப் போக்குவரத்தை அளிக்கத் திட்டமிட்டுள்ளோம் என இந்நிறுவனத்தின் தலைமை வர்த்தக அதிகாரியான ராஜ் சிவக்குமார் கூறினார்.
பாஸ்ட் ட்ராக்
ஜெட் ஏர்வேஸ் இச்சேவையைப் பாஸ்ட் ட்ராக் என்னும் பெயரில் தனது வாடிக்கையாளர்களுக்கு அளிக்க உள்ளது.
இந்தியாவில் (உள்நாட்டில்) மட்டும் செயல்படும் இத்திட்டம் கூடிய விரைவில் சர்வதேச சந்தையிலும் இயக்க இந்நிறுவனம் முயற்சி செய்து வருகிறது.
இதை வண்டியில் ஏற்றமாட்டோம்...
மேலும் இந்நிறுவனத்தின் கார்கோ சேவையில் ஆபத்தானப் பொருட்கள், விலை உயர்ந்த பொருட்கள் (தங்கம், வெள்ளி, வைரம் போன்றவை), விலங்குகள், அழுகக் கூடிய பொருட்களை டெலிவரி செய்யமாட்டோம் எனத் தெரிவித்துள்ளது.
டெல்லி
இந்நிறுவனத்தின் இப்புதிய சேவை டெல்லியை மையமாகக் கொண்டு செயல்படுத்த உள்ளது.
இந்தியாவில் பெங்களூரு மற்றும் வெளிநாடுகளுக்கு எதிஹாத் நிறுவன உதவியுடன் ஹாங்காங், ஹனாய், மற்றும் சிங்கப்பூர் ஆகிய இடங்களுக்கு இச்சேவை அளிக்க ஜெட் ஏர்வேஸ் முடிவு செய்துள்ளது.
கடன் பெற்ற விமானம்..
எதிஹாத் நிறுவனத்திடம் இருந்து வெட் லீஸ் முறையில் ஏ330-220எப் விமானத்தைக் குத்தகைக்கு வாங்கி இச்சேவையை ஜெட் ஏர்வேஸ் அளிக்கிறது.
தமிழ் குட்ரிட்டன்ஸ்
இனி தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்தை சமுக வலைதளங்கள் மூலம் இணைந்திடலாம். பேஸ்புக், டிவிட்டர் மற்றும் கூகிள் பிள்ஸ்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications