மும்பை: இந்திய சந்தையில் கடந்த 15 நாட்களில் சுமார் 1,361 கோடி ரூபாய் அளவிலான பண இருப்புக் குறைந்துள்ளதாகப் பங்குச்சந்தை வெளியிட்டுள்ள அறிக்கை தெரிவித்துள்ளது.
இதனால் நாட்டின் டாலர் இருப்பு அதிகளவில் குறைந்தது. வெள்ளிக்கிழமை வர்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 64.24 ரூபாயாகக் குறைந்துள்ளது.

ரிசர்வ் வங்கி, வெள்ளிக்கிழமை நாணயச் சந்தை வர்த்தகத்தில் குறிப்பிடப்படாத அளவில் டாலர் முதலீடு செய்தாலும், ரூபாய் மதிப்பின் வீழ்ச்சியைத் தடுக்க முடியவில்லை.
வெள்ளிக்கிழமை வர்த்தகத் துவக்கத்தில் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 63.54 ரூபாயாகத் துவங்கினாலும், 70 பைசா அளவிலான சரிவை சந்தித்து 64.24 ரூபாயாகக் குறைந்துள்ளது.
இதனால் இந்தியாவில் இறக்குமதி செய்யப்படும் அனைத்து பொருட்களும் தற்போது விலை உயர்ந்துள்ளதாகச் சந்தை வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.
சந்தையில் பண இருப்புக் குறைந்தது மட்டும் அல்லாமல் பங்குச்சந்தையில் கடந்த 15 நாள் வர்த்தகத்தில் 2 பில்லியன் டாலர் மதிப்பிலான பங்குகள் விற்கப்பட்டுள்ளது.
இனி தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்தை சமுக வலைதளங்கள் மூலம் இணைந்திடலாம். பேஸ்புக், டிவிட்டர் மற்றும் கூகிள் பிள்ஸ்.


Click it and Unblock the Notifications