டெல்லி: 2014ஆம் நிதியாண்டில் கச்சா எண்ணெயின் விலை அதிகளவில் குறைந்ததால் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை மத்திய அரசு பல முறை குறைத்தது. இதனால் அரசின் வருவாய் பாதித்தது.
நிதிநிலையை மேம்படுத்தும் பொருட்டு மத்திய அரசு பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை உயர்த்தியது. இதன் மூலம் கலால் வரி வசூல் 50 சதவீதம் உயர்ந்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.
50 சதவீதம் உயர்வு
2014-15ஆம் நிதியாண்டில் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரி வசூல் 50 சதவீதம் உயர்ந்து 74,465 கோடி ரூபாய் என்ற அளவை எட்டியுள்ளது.
ஜெயந்த் சின்ஹா
இதுகுறித்து நிதித்துறை அமைச்சரான ஜெயந்த் சின்ஹா நாடாளுமன்றத்திற்கு எழுத்து வடிவத்தில் அளித்த பதிலில், 2014-15ஆம் நிதியாண்டில் பெட்ரோல் மூலம் 31,165 கோடி ரூபாயும், டீசல் மூலம் 22,424 கோடி ரூபாயும் கலால் வரியாக வசூல் செய்யப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.
60 சதவீத உயர்வு
கடந்த வருடத்தை ஒப்பிடுகையில் டீசல் மீதான கலால் வரி வசூல் அளவு 60 சதவீதம் உயர்ந்து 43,300 கோடி ரூபாயாக உள்ளது. கடந்த வருடம் இதன் அளவு 27,146 கோடி ரூபாயாக இருந்தது.
கலால் வரி உயர்வு
2014-15ஆம் நிதியாண்டில் நவம்பர் 2014 முதல் ஜனவரி 2015 வரையிலான காலத்தில் மத்திய அரச நான்கு முறை பெட்ரோல் மற்றும் டீசல் மீதான விலையை உயர்த்தியுள்ளது.
கடந்த நிதியாண்டில் பெட்ரோல் 7.75 ரூபாயும், டீசல் 6.50 ரூபாய் அளவிலான கலால் வரி உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

நிர்மலா சீதாராமன் எடுத்த 10 ரூபாய் முடிவு.. அடுத்தடுத்து சிக்கல் காத்திருக்கு.. என்னதான் தீர்வு?

பெட்ரோல், டீசல் விலை குறையாது..? மத்திய அரசின் 10 ரூபாய் விலை குறைப்பு பின் இருக்கும் உண்மை..!!

பேருந்து டிக்கெட் கட்டணங்கள் குறைப்பு: எரிபொருளை சேமிக்க பொது போக்குவரத்தை பயன்படுத்த அறிவுரை!!

பெட்ரோல், டீசல் விலை 15 நாட்களுக்கு ஒருமுறை மாறுமா? மதிப்பாய்வு முறையை மாற்றிய அரசு

பெட்ரோல், டீசல் விலை உயர்வு: நயாரா நிறுவன பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டதால் மக்கள் ஷாக்

பெட்ரோல், டீசல் விலை குறையுமா? அதிரடியாக வரியை குறைத்த மத்திய அரசு!! வாகன ஓட்டிகளுக்கு குட் நியூஸ்!!

பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு என தகவல் பரப்பினால் சட்ட நடவடிக்கை: மத்திய அரசு கடும் எச்சரிக்கை!!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை



Click it and Unblock the Notifications