டெல்லி: நாட்டின் மிகப்பெரிய மற்றும் பழமையான தகவல் பரிமாற்ற நிறுவனமான இந்தியா போஸ்ட் நிறுவனம் கடந்தசில வருடங்களாக அதிகளவிலான வர்த்தகத்தை இழந்துள்ளது.
இந்நிலையை மாற்ற, மோடி தலைமையிலான அரசின் உதவியுடன் இந்நிறுவனம் பல புதிய முயற்சிகளைச் செய்துவருகிறது.
தற்போது இந்திய தபால் துறை, ஈகாமர்ஸ் நிறுவனங்களுடன் இணைந்து விநியோக சேவையில் இறங்க உள்ளது.இதற்கான பிரத்தியேக அலுவலகத்தை டெல்லியில் திறந்துள்ளது.
ஈகாமர்ஸ்
இந்தியாவில் ஈகாமர்ஸ் துறை மிகவும் வேகமாக வளர்ந்து வருகிறது, பிளிப்கார்ட், ஸ்னாப்டீல் போன்ற முன்னணிநிறுவனங்களும் சரி, ஜபாங் போன்ற சிறு நிறுவனங்களும் சரி இத்துறையில் சந்தித்து வரும் மிகப்பெரிய பிரச்சனைவாடிக்கையாளர்களுக்குப் பொருட்களை விநியோகம் செய்வதுதான்.
இதில் நம்ம இந்தியா போஸ்ட் நிறுவனம் கில்லி...
இணைப்பு
இப்பிரச்சனையைக் களைய பிளிப்கார்ட் முதன் முதலில் இந்தியா போஸ்ட் நிறுவனத்துடன் இணைந்தது. அதனைத்தொடர்ந்து ஸ்னாப்டீல் போன்ற பல நிறுவனங்கள் இந்திய தபால் துறையுடன் இணைந்துள்ளது.
டெல்லி
இப்பணிகளுக்காக இந்தியா போஸ்ட் நிறுவனம் டெல்லியில் சர்வதேச தரம் வாய்ந்த அலுவலக அமைப்பை நிறுவியுள்ளது.இதன் மூலம் பார்சல் புக்கிங் முதல் விநியோகம் வரையிலான நடவடிக்கையை இங்கு இந்தியா போஸ்ட் துவங்கியுள்ளது.
இந்த அலுவலகத்தைத் தொலைத்தொடர்பு அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் துவங்கி வைத்தார்.
30,000 பார்சல்கள்
முதல் கட்டமாக ஈகாமர்ஸ் நிறுவனங்களின் 30,000 பார்சல்களைத் தினமும் விநியோம் செய்ய இந்தியா போஸ்ட்திட்டமிட்டுள்ளது.
விரிவாக்கம்
டெல்லியில் துவங்கப்பட்ட இச்சேவை நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் கொண்டு சேர்க்க இந்தியா போஸ்ட் முடிவுசெய்துள்ளது.
மேலும் டெல்லியைத் தொடர்ந்து மும்பை, சென்னை, பெங்களூரு மற்றும் பிற இடங்களிலும் தனி அலுவலகத்தைஅமைக்க இந்திய தபால் துறை முடிவு செய்துள்ளது.
முக்கிய நிறுவனங்கள்
டெல்லி அலுவலகத்தில் அமேசான், பே-டிஎம், Yepme மற்றும் ஸ்னாப்டீல் ஆகிய நிறுவனங்கள் திங்கட்கிழமை முதல்தங்களது விநியோகத்தைத் துவங்கியுள்ளது.
தமிழ் குட்ரிட்டன்ஸ்
இனி தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்தை சமுக வலைதளங்கள் மூலம் இணைந்திடலாம். பேஸ்புக், டிவிட்டர் மற்றும் கூகிள் பிள்ஸ்.


Click it and Unblock the Notifications