டெல்லி: இந்திய விமான நிறுவனங்கள், விண்டோ சீட்டுகளைப் புக்கச் செய்யும் பயணிகளிடம் கூடுதல் கட்டணம் வசூல் செய்துகொள்ள விமானத்துறை இயக்குனரகம் ஒப்புதல் அளித்துள்ளது.
இதன் படி இண்டிகோ மற்றும் ஜெட் ஏர்வேஸ் நிறுவனங்கள் புதிய கட்டணங்களை அறிவித்துள்ளன.
புதிய கட்டணங்கள்
விமானத்தின் முதல் வரிசையிலும், அவசரக் காலத்தில் வெளியேற கதவுப் பக்கத்தில் இருக்கும் சீட்டுகளுக்கு 600 ரூபாயும், 2 முதல் 11 வரிசைகளில் இருக்கும் விண்டோ சீட்டுகளுக்கு 300 ரூபாயும், 14 முதல் 29 வரிசையில் உள்ள விண்டோ சீட்டுகளுக்கு 200 ரூபாய் கூட்டுதல் கட்டணமும் விதிக்கப்பட்டுள்ளது.
முதல் வரிசை இருக்கைகள்
முதல் வரிசை மற்றும் அவசரக்காலத்தில் வெளியேற கதவுப் பக்கத்தில் இருக்கும் சீட்டுகளில் கால் வைப்பதற்குக் கூடுதல் இடவசதி (Legroom) இருக்கும், இதற்காகத் தான் இந்தக் கூடுதல் கட்டணம் விமான நிறுவனங்கள் வசூல் செய்கிறது.
டிக்கெட் கேன்சல் கட்டணம்
மேலும் ஜெட் ஏர்வேஸ் மற்றும் இண்டிகோ நிறுவனங்கள் டிக்கெட் கேன்சல் கட்டணங்களை உயர்த்தியுள்ளது.
முன்பு இண்டிகோ நிறுவனம் டிக்கெட் கேன்சல் கட்டணமாக 1,500 ரூபாய் என்ற நிலையான கட்டணத்தை அறிவித்திருந்தது. தற்போது கால நிலைக்கு ஏற்ப 4 நிலை கட்டணமாக மாற்றியுள்ளது, இதில் அதிகப்படியாக 2000 ரூபாயில் இருந்து 1,250 ரூபாயாக உள்ளது.
சர்வதேச விமான டிக்கெட்
இண்டிகோ நிறுவனம் தனது சர்வதேச விமான டிக்கெட் கேன்சல் கட்டணத்தை 2,000 ரூபாயில் இருந்து 2,500 ரூபாயாக உயர்த்தியுள்ளது.
ஜெட்ஏர்வேஸ்
இண்டிகோ நிறுவனத்தைப் போலவே ஜெட்ஏர்வேஸ் நிறுவனம் டிக்கெட் கேன்சல் கட்டணத்தை 2000 ரூபாய் அளவில் இருந்து 4000 ரூபாய் வரை உயர்த்தியுள்ளது.
தமிழ் குட்ரிட்டன்ஸ்
இனி தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்தை சமுக வலைதளங்கள் மூலம் இணைந்திடலாம். பேஸ்புக், டிவிட்டர் மற்றும் கூகிள் பிள்ஸ்.


Click it and Unblock the Notifications