சென்னை: பிரிக்ஸ் வங்கி அமைவதன் மூலம் இந்தியாவிற்குக் கிடைக்கப்பெறும் ஆதாயங்களை நேற்று வெளியிட்டு இருந்தோம், இன்று இதனால் ஏற்பட உள்ள பாதிப்புகளைப் பார்க்கப்போகிறோம்.
நாணயத்தியத்திற்கு இரு பக்கம் இருப்பது போல ஒரு திட்டத்தில் நன்மையும் உண்டு பாதிப்பும் உண்டு. அதைப்போல் இத்திட்டத்தின் மூலம் இந்தியாவிற்கு ஏற்பட உள்ள குறைபாடுகள் மற்றும் பாதிப்புகளை இங்கே பார்க்கலாம் வாங்க.
முதலீட்டுத் தொகை போதாது
இவ்வங்கியில் முதலீட செய்யப்படும் 50 பில்லியன் டாலர் தொகை, மொத்தமும் இந்தியாவிற்குக் கொடுத்தாலும், நாட்டின் உள்கட்டமைப்புத் திட்டத்திற்குத் தேவைப்படும் 1 டிரில்லியன் டாலர் தொகைக்கு ஈடுசெய்ய முடியாது.
சீனாவில் பிரிக்ஸ்
பிரிக்ஸ் வங்கி சீனாவின் பெய்ஜிங் மாகாணத்தில் அமைவதால், இங்கு அதிகளவிலான பணியாளர்கள் சீன நாட்டினவராக இருப்பார்கள். இதனால் இங்கு வடிவமைக்கப்படும் திட்டங்கள் அனைத்தும் சீனாவிற்குச் சாதகமாக அமைய வாய்ப்புள்ளது.
முதலீடுகள்
5 நாடுகளில் இருந்து செய்யப்படும் முதலீடு அனைத்தும் சீனாவில் குவிய உள்ளதால், மதிப்பீடுகள் அனைத்தும் யுவான் நாணயத்தில் இருக்கும்.
இதனால் அமெரிக்க டாலருக்கு அடுத்தப்படியாக அதிகளவில் வர்த்தகம் செய்ய நாணயமாக யுவான் உருவாகும். அதனால் என்ன என்று கேட்க வேண்டாம்.. சர்வதேச சந்தையில் ரூபாய் மதிப்பு மேலும் சரிய வாய்ப்புள்ளது.
40 சதவீதம் சீனா கையில்
இவ்வங்கியில் முதலீடு செய்யப்படும் 100 பில்லியன் டாலர் தொகையில் 40 சதவீத சீனா செய்வதாக ஒப்புதல் அளித்துள்ளது. இதனால் இந்தியாவிற்கு அளிக்கப்படும் நிதியுதவியில் வட்டி வகிதத்தைக் குறைக்கச் சில கெடுபிடிகள் நிலவும்.
காலம் பதில் சொல்லும்
தற்போதைய நிலையில் பார்க்கும்போது, பொறுப்பை மட்டும் இந்தியாவிடம் கொடுத்துவிட்டு செயல்பாடு அனைத்தும் சீனா பார்த்துக்கொள்வதாகத் தெரிகிறது.
கே.வி.காமத் பிரிக்ஸ் வங்கியின் பொறுப்புகள் ஏற்றப்பின் உண்மையான நிலவரம் தெரியவரும்.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications