வரி வசூலில் சக்கை போடு போடும் மத்திய அரசு.. என்னதச் சொல்ல, நீங்களே பாருங்க!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: மத்திய அரசு 2014ஆம் நிதியாண்டில் வரி வசூல் இலக்கை அதிகரித்தாலும், கடந்த பட்ஜெட் அறிக்கையில்வருமான வரி செலுத்துவோருக்கு சில சலுகைகளை வழங்கியது.

 

கடந்த வாரம் நிதியமைச்சகம் வெளியிட்ட, நேரடி வரி வசூல் அறிக்கையில் இலக்கை எட்ட முடியாமல் தவித்தாலும்,கடந்த ஆண்டை விட19 சதவீதம் அதிகமான தொகையை மத்திய அரசு நேரடி வரியாக வசூல் செய்துள்ளது.

2014-15ஆம் நிதியாண்டின் மறைமுக வரி வசூல் 46.2 சதவீதம் அதிகரித்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

46.2 சதவீத உயர்வு

46.2 சதவீத உயர்வு

2014-15ஆம் நிதியாண்டில் மத்திய அரசு மறைமுக வரியாகச் சுமார் 47,747 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. இது கடந்த வருடத்தை ஒப்பிடும்போது 46.2 சதவீதம் அதிகமாகும்.

இக்காலகட்டத்தில் கலால் வரியின் வசூல் அளவும் 2 மடங்கு அதிகரித்துள்ளதாகவும் நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.

மறைமுக வரி

மறைமுக வரி

மறைமுக வரியின் கீழ் கலால் வரி, சேவை வரி, மற்றும் சுங்க வரி ஆகியவை உள்ளது. கடந்த வருடம் இதன் அளவு வசூல் 32,661 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

கலால் வரி

கலால் வரி

கடந்த வருடம் நாட்டின் கலால் வரி வசூல் 112.3 சதவீதம் உயர்ந்து 18,373 கோடி ரூபாயாக உள்ளது. அதேபோல் சேவை வரிவசூல் அளவு 21.2 சதவீதம் அதிகரித்து 15,088 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.

 தொழிற்துறை உற்பத்தி
 

தொழிற்துறை உற்பத்தி

நாட்டின் மறைமுக வரி இந்திய தொழிற்துறை உற்பத்திக்கு நேரடி தொடர்புடையவை, இதனால் மறைமுக வரி வசூல் அளவைக் கொண்டு நாட்டின் தொழிற்துறை உற்பத்தியை எளிதாகக் கணக்கிட முடியும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Indirect tax collections up 46.2 % in April

Led by over two-fold surge in excise duty collections, indirect tax revenue jumped 46.2 per cent to Rs.47,747 crore in April this year compared to the same month last year.
Story first published: Wednesday, May 13, 2015, 15:12 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X