மும்பை: இன்றைய வர்த்தகத்தில் வங்கிகள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் அதிகளவிலான டாலர்களை விற்பனை செய்ததால், நாணய சந்தையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 19 பைசா உயர்ந்து 63.46 என்றஅளவை எட்டியுள்ளது.
சந்தையில் டாலர் மதிப்பின் உயர்வைக் கட்டுப்படுத்தும் நோக்கில் ரிசர்வ் வங்கி, செய்த டாலர் முதலீட்டின் மூலம் கடந்த சில நாட்களாக ரூபாய் மதிப்பு மிதமான வேகத்தில் உயர்ந்து வருகிறது.

கடந்த வாரம் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 64.15 ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
டாலர் முதலீடுகள் தொடர் குறைந்து வரும் நிலையில் உள்நாட்டு பங்குச் சந்தையில் அதிகளவிலான முதலீட்டுவாய்ப்புகள் உருவாகியுள்ளது. இதன் காரணமாக ரூபாய் மதிப்பு சர்வதேச சந்தையில் அதிகரிக்கத் துவங்கியுள்ளது.

வியாழக்கிழமை வர்த்தகத்தில் ரூபாய் மதிப்பு 35 பைசா வரை உயர்ந்து 63.65 ரூபாய் என்ற அளவை எட்டிோயது.


Click it and Unblock the Notifications