பெங்களூரு: 146 பில்லியன் டாலர் மதிப்புள்ள இந்திய ஐடி நிறுவனங்கள் அமெரிக்கா, சீனா, அஸ்திரேலியா சந்தைகளை வென்றுவிட்ட நிலையில் அடுத்த மிகப்பெரிய சந்தையாகத் திகழ்கிறது ஐரோப்பா.
அடுத்தச் சில மாதங்களில் ஐரோப்பா சந்தையில் மிகப்பெரிய வளர்ச்சியைப் பார்த்து விடலாம் எனத் திட்டம் தீட்டிய வந்த இந்திய நிறுவனங்களுக்கு, இந்நாட்டின் பொருளாதார நிலை மிகப்பெரிய பின்னடைவாக அமைந்துள்ளது.

கடந்த வருடம் இச்சந்தையில் இந்திய ஐடி நிறுவனங்கள் சராசரியாக 25-30 சதவீத வளர்ச்சியைப் பெற்றது. நடப்பு நிதியாண்டில் இதன் அளவு சரிபாதியாகக் குறையும் என இச்சந்தை வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.
இதில் சந்தை முன்னணி நிறுவனமாகத் திகழும் டிசிஎஸ், விப்ரோ, இன்போசிஸ், சிடிஎஸ் அகியவை அதிகளவில் பாதிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.
மேலும் டிசிஎஸ், விப்ரோ, இன்போசிஸ் நிறுவனங்களின் காலாண்டு முடிவுகள் முதலீட்டாளர்களை ஏமாற்றியுள்ள நிலையில், ஐரோப்பா சந்தையின் நிலை இந்நிறுவனத்தை அதிகளவில் பாதிக்கும் எனத் தெரிகிறது.


Click it and Unblock the Notifications