பெய்ஜிங்: இந்தியாவின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனமான இன்போசிஸ், முதல் முறையாக வெளிநாட்டில் ஒவர்சீஸ் சென்டரை அமைக்க உள்ளது.
சீன அரசிடம், இந்திய அரசு ஏற்கனவே இந்திய ஐடி மற்றும் டெக்னாலஜி நிறுவனங்களுக்குச் சீன சந்தையில் வர்த்தகம்செய்ய ஏதுவான சூழ்நிலைகளை அமைத்துக் கொடுக்கப் பேச்சுவார்த்தை நடத்தியது குறிப்பிடத்தக்கது.
சீனா
சீனாவில் பல துறைகளின் உற்பத்தி அளவு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், தற்போது சாப்ட்வேர்நிறுவனங்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.
இந்நாட்டில் மென்பொருள் துறைக்கு மிகப்பெரிய சந்தை உள்ளது.
ஒப்பந்தம்
ஞாயிற்றுக்கிழமை பிரதமர் மோடி கலந்துகொண்ட இந்தியா-சீன வர்த்தக மாநாட்டில், இன்போசிஸ் மற்றும் அந்நாட்டு அரசுபுதிய ஒவர்சீஸ் சென்டரை அமைப்பதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
பொருளாதார நிலை
சீனா தற்போதுள்ள பொருளாதார நிலையில், இன்போசிஸ் உடனான ஒப்பந்தம் சாதகமானது, ஆனால் இந்நாட்டு வர்த்தகம்மற்றும் பொருளாதார நிலை மோசமாக உள்ளதால், இன்போசிஸ் நிறுவனத்திற்குப் பெருவாரியான வாடிக்கையாளர்கள்பெறுவது கடினமாக இருக்கும்.
2016 புதிய அலுவலகம்
இந்த ஒப்பந்தத்தின் படி சீனாவில் இந்தப் புதிய அலுவலகம் 2016ஆம் ஆண்டில் துவங்கப்படும்.
ரங்கராஜன் வெள்ளாமோர்
இப்புதிய அலுவலகம் சீனாவின் Guizhou பகுதியில் அமைய உள்ளது. மேலும் இங்கு 4500 பணியாளர்கள் பணியாற்றும்அளவிற்கு மிகப்பெரிய அலுவலகமாக அமைக்க இன்போசிஸ் திட்டமிட்டுள்ளது.
மேலும் இந்த அலுவலகத்தின் தலைவராக ரங்கராஜன் வெள்ளாமோர் இருப்பார் என இன்போசிஸ் தெரிவித்துள்ளது.
முதலீடு
சீனாவின் மென்பொருள் துறையில் வளர்ச்சியில் இன்போசிஸ் பங்குபெறவும், அதிக வருவாய் பெறவும், 120 மில்லியன்டாலர் முதலீடு செய்ய இன்போசிஸ் முன்வந்துள்ளது.


Click it and Unblock the Notifications