சியோல்: உலகின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான ஹூண்டாய் மோட்டார்ஸ், இந்தியாவில் புதிய கார் தயாரிப்புதொழிற்சாலையை அமைக்கத் திட்டமிட உள்ளதாக இந்நிறுவனத்தின் தலைவர் சுங் மாங்-கோ தெரிவித்தார்.
பிரதமர் மோடி தென் கொரியா சென்ற போது, இந்நாட்டின் தலைநகரில் முக்கிய நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும்நிர்வாக அதிகாரிகளைச் சந்தித்தார்.
சந்திப்பு
தென் கொரியா தலைநகரில் நடந்த முக்கியக் கூட்டத்தில் ஹூண்டாய் நிறுவனத்தின் தலைவர் சுங் மாங்-கோகலந்துகொண்டார். இச்சந்திப்பின் பின் சுங் செய்தியாளர்களிடம் இந்தியாவில் புதிய தொழிற்சாலையை அமைப்பது குறித்துயோசிக்க உள்ளோம் எனத் தெரிவித்தார்.
சென்னை
இந்தியாவில் இந்நிறுவனம் ஏற்கனவே இரு தொழிற்சாலைகள் அமைத்துள்ளது. இவ்விரண்டும் சென்னையில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கத்து.
ஆண்டுக்கு 680,000 கார்களை இந்நிறுவனம் இத்தொழிற்சாலைகளில் இருந்து தயாரித்து இந்தியாவிலும், வெளிநாட்டுச்சந்தைகளிலும் ஹூண்டாய் விற்று வருகிறது.
நிர்வாக மாற்றம்
மேலும் இந்நிறுவனத்தை நிதி நிலை மற்றும் தொழில்நுட்ப மேம்பட, ஹூண்டாய் நிர்வாகக் குழு, கடந்த வருடம் சாம்சங்நிறுவனத்திலிருந்து ஹூண்டாய் நிறுவனத்தில் இணைந்த ஹவாங் சியோங் ஹோ அவர்களைத் தொழில்நுட்பத் தலைவராக நியமித்துள்ளது.
லாபம்
2015ஆம் நிதியாண்டில் இந்நிறுவனத்தின் லாப அளவு 1.588 டிரில்லியன் டாலராகக் குறைந்துள்ளது. இதற்கு முக்கியக்காரணம் சர்வதேச சந்தையில் கொரியா நாணயமாக வான் மதிப்பு அதிகளவிலான சரிவைச் சந்தித்துள்ளது.


Click it and Unblock the Notifications