ஜூன் 1 முதல் 14% சேவை வரி அமலுக்கு வருகிறது! கண், காது, வாய் எல்லாத்தையும் அடக்க வேண்டும்...

டெல்லி: நிதியமைச்சர் அருண் ஜேட்லி கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய 2015-16ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் அறிக்கையில் அறிவித்த 14 சதவீத சேவை வரி வருகிற ஜூன் 1ஆம் தேதி முதல் அமலாக்கம் செய்யப்படுவதாக நிதியமைச்சகம் அறிவித்துள்ளது.

இதன் மூலம் உணவகம் முதல் விமானம் வரை அனைத்து இடங்களிலும் சேவை வரி உயர உள்ளது. எனவே நமது மாத பட்ஜெட் அதிகரிக்கப் போகிறது.

சேவை வரி

சேவை வரி

தற்போதைய நிலையில் இதன் அளவு 12 சதவீதமாக உள்ளது, இந்தச் சேவை வரி உயர்வு கல்வித்துறையிலும் விதிக்கப்படுகிறது. கல்விக்கான சேவை வரியில் 3 சதவீத சலுகைக்குப் பின் இதன் அளவு 12.36 சதவீதமாக உயர உள்ளது.

விலை உயர்வு

விலை உயர்வு

இச்சேவை வரி உயர்வால் நாட்டில் பல சேவைகளின் விலை உயர உள்ளது. எனவே ஜூன் 1ஆம் தேதி முதல் விலைஉயரும் சேவை மற்றும் பொருட்களைப் பார்ப்போம்.

ஹோட்டல் பில்

ஹோட்டல் பில்

நீங்கள் அதிகமாக வெளியிடங்களில் சாப்பிடும் பழக்கம் உள்ளவரா, அப்படியானால் உங்கள் கைகளைக் கட்டிப்போடும் நேரம் வந்துவிட்டது. சேவை வரி 12.36 சதவீதத்திலிருந்து இருந்து 14 சதவீதமாக அதிகரிப்பதால் இனி உங்களது ஹோட்டல் பில் பர்சை பதம் பார்க்கும்.

விமானப் பயணம்

விமானப் பயணம்

சேவை வரியின் உயர்வு காரணமாக விமானக் கட்டணங்களும் உயர வாய்ப்புள்ளது. குறிப்பாகப் பிஸ்னஸ் கிளாஸ் பயணிகளின் விமானக் கட்டணங்கள் உயரும்.

மொபைல் பில்

மொபைல் பில்

ஏற்கனவே மொபைல் சேவை நிறுவனங்கள் ஸ்பெக்ட்ரம் ஏலத்தில் முதலீடு செய்த பணத்தை எப்படியாது எடுக்க வேண்டும் என்று கட்டணத்தை உயர்த்த திட்டமிட்டுள்ள நிலையில், மத்திய அரசு சேவை வரி உயர்வும் இச்சுமையில் இணைந்துள்ளது. 

இதனால் மொபைல் கட்டணங்கள் உயர்வு குறித்த அறிவிப்புகள் அடுத்த சில நாட்களில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கேப் மற்றும் டாக்ஸி சேவை

கேப் மற்றும் டாக்ஸி சேவை

இச்சேவை வரி உயர்வினால் கேப் மற்றும் டாக்ஸி கட்டணங்கள், டிடிஹெச் (DTH) சேவை, பியூட்டி பார்லர், இன்சூரன்ஸ், பங்குச் சந்தையின் வர்த்தக கட்டணங்கள், கொரியர் சேவை, சலவை சேவை(Laundry services) ஆகியவற்றின் கட்டணங்களும் உயர உள்ளது.

பிற பொருட்கள்

பிற பொருட்கள்

அதுமட்டும் அல்லாமல் குளிர்பானங்கள், பிளாஸ்டிக் பைகள், மதுபானம், சிட் ஃபண்ட், லாட்டரி, இசைக் கச்சேரி, திரைப்படம் மற்றும் தீம் பார்க் கட்டணங்களும் உயரப் போகின்றன.

மிகப்பெரிய வளர்ச்சி

மிகப்பெரிய வளர்ச்சி

 

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+