பெங்களூரு: ஐகேட் நிறுவனத்தை 4.04 பில்லியன் டாலருக்கு, ஐரோப்பிய மென்பொருள் நிறுவனமான கேப்ஜெமினி கைப்பற்ற இருநிறுவனங்களும் ஒப்புக்கொண்ட நிலையில் அமெரிக்கப் பங்குச்சந்தையில் இருந்து ஐகேட் நிறுவனம் தனது பதிவை ரத்துச் செய்துகொண்டது.
இதன் மூலம் 18 வருடமாக அமெரிக்கப் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனம் தற்போது இல்லை.
ஐகேட்
இந்நிறுவனம் அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்டும், அதிகளவிலான வர்த்தகத்தை அமெரிக்காவிலேயே செய்து வந்தாலும், இந்நிறுவனத்தில் இந்திய பணியாளர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகம்.
பணியாளர்கள்
இன்றைய தேதியில் ஐகேட் நிறுவனத்தில் 33,000 பணியாளர்களும், கேப்ஜெமினி நிறுவனத்தில் 1.41 இலட்ச பணியாளர்கள் பணியாற்றிவருகின்றனர்.
பங்குச் சந்தையில் இருந்து விலகல்
நிறுவனத்தைக் கேப்ஜெமினி கையற்றியதால், அமெரிக்கப் பங்குச்சந்தையில் இருந்து ஐகேட் விலக விரும்புவதாக யுஎஸ் செக்குரிட்டிஸ் மற்றும் எக்ஸ்சேன்ஞ் கமிஷன்-க்கு ஐகேட் கடிதம் அளித்துள்ளது.
3வது காலாண்டு
இந்த நிறுவன இணைப்பு 2015ஆம் ஆண்டின் 3வது காலாண்டில் நடைபெற உள்ளதாக இருநிறுவனங்களும் தெரிவித்துள்ளது. இந்நிலையில் கேப்ஜெமினி நிறுவனம் மெர்ரில் லிஞ்ச் நிறுவனத்தை நிதி ஆலோசகராக நியமித்துள்ளது.
பங்கு பரிமாற்றம்
மேலும் இரு நிறுவனங்களின் ஒப்புதல் படி ஐகேட் நிறுவன பங்குகளை 48 டாலருக்கு கேப்ஜெமினி கைப்பற்ற உள்ளது.
பங்கு இருப்பு
தற்போது ஐகேட் நிறுவனத்தின் 29 சதவீத பங்குகள் அபக்ஸ் பார்ட்னர்ஸ் நிறுவனத்திடமும், 25 சதவீத பங்குகள் ஐகேட் நிறுவனத்தின் நிறுவனர்களான சுனில் வாத்வானி மற்றும் அசோக் திரிவேதி ஆகியோரிடம் உள்ளது.
கேப்ஜெமினி நிறுவனம் முதல் கட்டமாக இவ்விரு தரப்பினர்கள் மத்தியில் இருக்கும் 54 சதவீத பங்குகள் கைப்பற்றவும், அதன் பின் மீதமுள்ள பங்குதாரர்களிடம் இருக்கும் பங்குகளைக் கைப்பற்றவும் திட்டமிட்டுள்ளது.
பாட்னி கம்பியூட்டர்ஸ்
2011ஆம் ஆண்டு ஐகேட் நிறுவனம், பாட்னி கம்பியூட்டஸ் நிறுவனத்தைக் கைப்பற்றும் திட்டத்தில் அபக்ஸ் பார்ட்னர்ஸ் சுமார் 1.2பல்லியன் டாலர் கடன் அளித்தது. இக்கடன் தொகையை அடுத்தச் சில ஆண்டுகள் பங்குகளாக மாற்றிக் கொண்டது அபக்ஸ், இதன் மூலமாகத் தான் இந்நிறுவனம் 29 சதவீத பங்குகளைப் பெற்று நிர்வாகக் குழுவில் இடத்தைப் பிடித்தது.
2.2 பில்லியன் டாலர்
இந்நிலையில் கேப்ஜெமினி பங்குகளைக் கைபற்றிய பின் சுனில் வாத்வானி மற்றும் அசோக் திரிவேதி ஆகியோ 1 பில்லியன் டாலரும், அபக்ஸ் நிறுவனம் 1.2 பில்லியன் டாலரும் பெற உள்ளது.
அசோக் வெமுரி
இன்போசிஸ் நிறுவனத்தின் உயர் மட்ட குழுவில் இருந்து கடந்த வருடம் வெளியேறிய அசோக் வெமுரி, ஐகேட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.
ஐகேட் நிறுவன சீஇஓ பதிவியில் ஒரு வருடம் மட்டுமே முடிந்த நிலையில் இந்நிறுவனத்தைக் கேப்ஜெமினி கைப்பற்றுவது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications