டெல்லி: நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, 2014ஆம் நிதியாண்டின் நான்காவது காலாண்டில் சுமார் 3,742.02 கோடி ரூபாய் லாபம் பெற்றுள்ளது.
இது கடந்த வருடத்தை விடவும் 23 சதவீதம் அதிகமாகும், 2013ஆம் நிதியாண்டின் இதே காலகட்டத்தில் இவ்வங்கியின் மொத்த லாபம் ரூ.3040.7 கோடியாக இருந்து குறிப்பிடத்தக்கது.

மேலும் ஆண்டின் மொத்த லாப அளவும் 20 சதவீதம் அதிகரித்துள்ளதாக எஸ்பிஐ வங்கித் இன்று வெளியிட்ட காலாண்டும் மற்றும் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் தெரிவித்துள்ளது.
2014ஆம் நிதியாண்டில் இவ்வங்கியின் மொத்த லாபம் 13,101.57 கோடி ரூபாயாகும்.
தனியார் வங்கித்துறையில், ஐசிஐசிஐ வங்கி, ஹெச்டிஎப்சி வங்கிகளை ஒப்பிடுகையில் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவின் வராக் கடன் அளவு குறைவாகவே உள்ளது.
இன்றைய பங்குச் சந்தையில் இந்நிறுவனத்தின் பங்குகள் சுமார் 3 சதவீதம் அளவில் உயர்ந்தாலும், காலாண்டு முடிவுகளுக்குப் பின் 1.2 சதவீதம் சரிந்தது.


Click it and Unblock the Notifications