மும்பை: இந்தியாவின் பலதுறை நிறுவனமான மஹிந்திரா அண்ட்மஹிந்திரா குழுமம், ஜப்பான் மிட்சுபிஷி டிராக்டர் மற்றும் விவசாய உபகரண நிறுவனத்தின் 33 சதவீத பங்குகளை வாங்கியுள்ளதாக வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.
இந்த 33 சதவீத பங்குகளை மஹிந்திரா அண்ட் மஹிந்திரா குழுமம் 25 மில்லியன் டாலருக்குக் கைப்பற்றியதாகப் பங்குச் சந்தைக்குச் சமர்ப்பித்த அறிக்கையில் இருந்தது மஹிந்திரா குழுமம் குறிப்பிட்டு இருந்தது.

இவ்விரு நிறுவனங்களின் இணைப்பின் மூலம் ஆசிய சந்தையில் வர்த்தக்ததை அதிகரிக்க இக்கூட்டணி திட்டம் தீட்டு வருகிறது.
மேலும் 33 சதவீத பங்குகளைக் கைப்பற்றியதன் மூலம் மிட்சுபிஷி நிர்வாகத்தில் 4 உறுப்பினர்களுக்கான இடத்தை மஹிந்திரா பெறுகிறது.

அதுமட்டும் அல்லாலமல் நிறுவன இணைப்பின் மஹிந்திரா தொழிற்சாலையும் புதிய தொழில்நுட்பத்துடன் மேம்பட உள்ளது.
இந்திய சந்தையில் மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனத்தின் மொத்த மதிப்பு 17 பில்லியன் டாலராகும்.


Click it and Unblock the Notifications