மும்பை: இந்தியன் ஆயில் குழும நிறுவனங்களில் ஒன்றான சென்னை பெட்ரோலியம், 2014ஆம் நிதியாண்டின் நான்காவது காலாண்டின் லாப அளவு சுமார் 7 மடங்கு உயர்ந்துள்ளது.
இக்காலகட்டத்தில் இந்நிறுவனத்தின் மொத்த லாப அளவு 364.57 கோடி ரூபாய் அதிகரித்துள்ளது.

கடந்த வருடம் இதேகாலகட்டத்தில் இதன் லாப அளவு சுமார் 49.81 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
கச்சா எண்ணெயின் விலை 6 வருட சரிவை தழுவியதால் இக்காலகட்டத்தில் இந்நிறுவனத்தின் மொத்த வருவாய் அளவு 8,823.95 கோடியாக குறைந்துள்ளது. கடந்த வருடம் இதன் அளவு 13,339.68 கோடியாகும்.

மேலும் 2014ஆம் ஆண்டில் இந்நிறுவனத்தின் மொத்த வருவாய் அளவு 41,865.96 கோடியாக உள்ளது.
இந்நிலையில் திங்கட்கிழமை வர்த்தகத்தில் மும்பை பங்குச் சந்தையில் சென்னை பெட்ரோலியம் நிறுவனத்தின் பங்கு மதிப்பு இன்று ஒரு நாளில் மட்டும் 19.89 சதவீதம் உயர்ந்து 108.70 ரூபாயாக உள்ளது.


Click it and Unblock the Notifications