டெல்லி: இந்தியாவில் இரண்டாம் தர நகரங்களான ஜெய்ப்பூர், சூரத், லக்னோ போன்ற வளர்ச்சி மிகுந்த இடங்களில் வருமான வரித்துறை சிறப்புத் தகவல்கள் மற்றும் சோதனை முறையைக் கொண்டு அதிக வருமானம் பெறுபவர்களைக் கண்டறிய திட்டமிட்டுள்ளது.
இதன் மூலம் 2ஆம் தர நகரங்களில் வரி செலுத்துவோர் எண்ணிக்கையை அதிகளவில் உயர்த்த வருமான வரித் துறை முடிவுசெய்துள்ளது.
புதிய செயல்திட்டம்
அடுத்த மாத துவக்கத்தில் வருமான வரித் செலுத்துவோர் மீது மத்திய அரசு புதிய திட்டத்தை அறிவிக்க உள்ளது, இதனை வருமான வரித்துறை மற்றும் மத்திய சுங்கம் மற்றும் கலால் வரித்துறை செயல்படுத்த உள்ளது.
இப்புதிய திட்டத்தின் படி ஒவ்வொரு மாதமும், குறைந்தபட்சம் 25லட்சம் பேரை வருமான வரி செலுத்துவோர் பட்டியலுக்குக் கீழ்கொண்டு வர வேண்டும் என நிதியமைச்சகம் வருமான வரித்துறையை அறிவுறுத்தியுள்ளது.
ஸ்மார்ட் சிஸ்டம்
இதுகுறித்து வருமான வரித் துறை ஆதிகாரி ஒருவர் கூறுகையில், "இந்தியாவில் 2ஆம் தர நகரங்களில் வருமான வரி செலுத்துவோர் எண்ணிக்கையை உயர்த்தும் பணியில் எந்த விதமான தடை மற்றும் குறைபாடுகள் ஏற்படாமல் இருக்க ஸ்மார்ட் டெக்னிக்கல் இண்டலிஜென்ஸ் மற்றும் பிஸ்னஸ் கம்பியூடேஷன் டேட்டாபேஸ் பயன்படுத்தத் திட்டமிட்டுள்ளோம்" என அவர் தெரிவித்தார்.
வருமான வரி
இப்புதிய மற்றும் மேம்படுத்தப்பட்ட திட்டத்தைப் பயன்படுத்துவதன் மூலம் நாட்டின் வருமான வரி சொலுத்துவோர் எண்ணிக்கையை உயர்த்துவது குறித்து, வருமான வரித்துறை அதிகாரிகள் கலந்துகொள்ளும் இரண்டு நாள் கூட்டத்தில் ஆலோசனை செய்யப்படுகிறது.
இக்கூட்டம் திங்கட்கிழமை (இன்று) நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
அருண் ஜேட்லி
இந்த ஆலோசனை கூட்டத்தைத் தலைநகர் டெல்லியில் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி துவங்கி வைக்கிறார்.
2ஆம் தர நகரங்கள்
இந்தியாவில் 2ஆம் தர நகரங்கள் கடந்த சில வருடங்களாக மிகப்பெரிய வளர்ச்சியைச் சந்தித்துள்ளது. மேலும் இங்கு வருவாய் அதிகரிப்பதற்கான சாத்திக்கூறுகள் அதிகம் உள்ளது.
More From GoodReturns

ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அப்டேட்.. 3 மாதத்திற்கான பொருள் ஒரே நேரத்தில்.. மத்திய அரசின் முடிவு

ஆனந்த் ஸ்ரீனிவாசன்: படிச்சு படிச்சு சொன்னேன்.. யாரும் கேட்ல 'Big Drop'.. வெள்ளி அதோ கதி..!!

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!



Click it and Unblock the Notifications