மும்பை: 2014ஆம் நிதியாண்டின் கடைசிக் காலாண்டில் ஐடிசி நிறுவனத்தின் மொத்த லாப அளவு 3.65 சதவீதம் அதிகரித்து 2361.18 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
சந்தையின் கணிப்புகளை எட்ட ஐடிசி தவறவிட்டதால் மும்பை பங்குச்சந்தையில் இந்நிறுவனப் பங்குகள் இன்று 2.89 சதவீதம் சரிந்து 319.65 ரூபாயாகக் குறைந்துள்ளது.
மேலும் இக்காலகட்டத்தில் ஐடிசி நிறுவனத்தின் மொத்த வருவாய் அளவு 9,663.15 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
காலாண்டு முடிவுகள்
இந்நிறுவனத்தின் காலாண்டு முடிவுகள் வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்டதால் சந்தையில் இதன் தாக்கம் திங்கட்கிழமை வர்த்தகத்தில் தெரிகிறது.
சிகரெட் வர்த்தகம்
இந்தியாவில் அதிகளவிலான சிக்ரெட் விற்பனை செய்யும் நிறுவனமான ஐடிசி நிறுவனம் இக்காலாண்டில் மிகவும் குறைவான வர்த்தகத்தைப் பதிவு செய்துள்ளதாகச் சந்தை வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தியாவில் புகைப்பழக்கத்தை ஒழிக்கும் பொருட்டு மத்திய அரசு சிகரெட் மீதான வரியைத் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன் காரணமாகவே விற்பனை குறைந்துள்ளது.
லாபம்
வரிக்கு பிந்தைய லாப அளவாக ஐடிசி 4 காலாண்டில் 6.4 சதவீத உயர்வைச் சந்தித்துள்ளது.
ஐடிசி
இந்நிறுவனம் இந்தியாவில் சிகரெட் மட்டும் அல்லாமல் ஹோட்டல், பேப்பர், பார்சல், விவசாயம், பதப்படுத்தப்பட்ட உணவுகள், தகவல் தொழில்நுட்பம், ஆடை விற்பனை, போன்ற பல துறைகளில் வர்த்தகம் செய்து வருகிறது.


Click it and Unblock the Notifications