பெங்களூரு: அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வந்த ஐகேட் நிறுவனத்தைப் பிபிஓ நிறுவனமான ஜென்பேக்ட் கையகப்படுத்த முயற்சி செய்தபோது ஐரோப்பிய நிறுவனமான கேப்ஜெமினி அதைத் தட்டிப் பறித்தது.
தற்போது ஜென்பேக்ட் நிறுவனம், நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் சின்டெல் நிறுவனத்தைக் கைப்பற்ற பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
மந்தமான பேச்சுவார்த்தை
கடந்த சில மாதங்களாகவே ஜென்பேக்ட் நிறுவனம், சின்டெல் நிறுவனத்துடன் நிறுவன இணைப்புக் குறித்துப் பேசிக் கொண்டு இருக்கிறது. ஐகேட் நிறுவனத்தின் மீதான கவனத்தினால் இதுகுறித்த நடவடிக்கைகள் மந்தமாக இருந்தது.
தற்போது இருநிறுவனங்களின் இணைப்பிற்கான நடவடிக்கைகள், மதிப்பீடுகள் மற்றும் பேச்சுவார்த்தை போன்றவை சூடுபிடித்துள்ளது.
ஜென்பேக்ட்
இந்நிறுவனம் துவக்கம் முதல் பிபிஓ துறையில் சிறந்து விளங்கி வருகிறது. காலப்போக்கில் இந்நிறுவன வாடிக்கையாளர்களுக்கு ஜென்பேக்டின் ஐடி சேவை மிகவும் பிடித்ததால், இந்நிறுவனம் தொடர்ந்து ஐடி சேவையில் அதிகப்படியான கவனத்தைச் செலுத்தத் துவங்கியது.
பெயின் கேப்பிடல்
ஜென்பேக்ட் நிறுவனத்தின் 30 சதவீத பங்குகளைக் கைபற்றிய பெயின் கேப்பிடல் என்னும் முதலீட்டு நிறுவனமும் சின்டெல் நிறுவனத்துடனான கையகப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளது.
எனவே இரு நிறுவனங்களும் இணைந்து தக்க முதலீட்டுன் சின்டெல் நிறுவனத்தைக் கூடிய விரைவில் கைப்பற்ற திட்டமிட்டுள்ளது.
2.27 பில்லியன் டாலர் வர்த்தகம்
ஜென்பேக்ட் நிறுவனத்தின் மொத்த ஆண்டு வர்த்தகம் தற்போது 1 பில்லியன் டாலர் மதிப்பில் உள்ளது.
சின்டெல் நிறுவனத்தைக் கைப்பற்றுவதன் மூலம் இந்நிறுவனத்தின் மொத்த ஆண்டு வர்த்தகம் 2.27 பில்லியன் டாலரை எட்டும் என ஜென்பேக்ட் தெரிவித்துள்ளது.
முக்கியத் துறை வளர்ச்சி
ஜென்பேக்ட் மற்றும் சின்டெல் நிறுவனங்கள் இணைவதன் மூலம் இக்கூட்டணி நிறுவனம் வங்கியியல், நிதிச் சேவைகள், முதலீட்டுச் சந்தை மற்றும் இன்சூரன்ஸ் ஆகிய துறைகளில் சிறப்பான வளர்ச்சியை அடையும்.
சின்டெல்
இந்திய அமெரிக்கரான பார்த் தேசாய் மற்றும் அவரது மனைவி நீரஜா சேதி ஆகியோர் இணைந்து 1980ஆம் ஆண்டுச் சின்டெல் நிறுவனத்தைத் துவங்கினர்.
3.7 பில்லியன் டாலர்
பார்த் தேசாய் தலைமையில் சின்டெல் நிறுவனம் 911 மில்லியன் டாலர் நிறுவனமான உருவாகியுள்ளது. சந்தை மதிப்பின் படி இந்நிறுவனத்தின் மொத்த மதிப்பு 3.7 பில்லியன் டாலர்.
மார்ச் மாத கணக்கின் படி சின்டெல் நிறுவனத்தில் 24,553 பேர் பணியாற்றுகின்றனர்.
ஆட்குறைப்பு


Click it and Unblock the Notifications