ஹைதராபாத்: உலகின் மிகப்பெரிய இண்டர்நெட் நிறுவனமான கூகிள், ஏற்கனவே இந்தியாவில் நான்கு இடங்களில் அலுவலகங்களை அமைத்திருந்தாலும், ஹைதராபாத்தில் பிரத்தியகமாக 1,500 கோடி ரூபாய் முதலீட்டில் புதிய கூகிள் கேம்பஸ்-யை உருவாக்க உள்ளது.
இப்புதிய அலுவலகம் 3 மூன்று முக்கியப் பிராஜெக்டை முக்கியக் குறிக்கோளாகக் கொண்சு துவக்கப்பட்டுள்ளது.
1,500 கோடி ரூபாய் முதலீடு
கூகிள் நிறுவனம் இந்தியாவில் ஏற்கனவே மும்பை, கூர்கான், பெங்களூரு மற்றும் ஹைதராபாத் ஆகிய பகுதிகளில் இருக்கும் போது. இந்நிறுவனத்தின் மூன்று முக்கியத் திட்ட வளர்ச்சிக்காகக் கூகிள் 1,500 கோடி முதலீட்டில் மிகப்பெரிய அலுவலகத்தை அமைக்க உள்ளது.
இது அமெரிக்காவிற்கு வெளியில் உள்ள அலுவலகங்களில் மிகப்பெரிய ஒன்றாக இருக்கும் கூகிள் தெரிவித்துள்ளது.
மூன்று முக்கியப் பிராஜெட்
இந்த அலுவலகம் சூப்பர் பாஸ்ட் கூகிள் பைபர் பிரான்ட்பேன்டு சர்வீஸ், ஸ்டிரீட் வியூவ் மற்றும் கூகிள் கல்வி ஆகியவற்றை மையமாக வைத்துத் துவக்கப்பட்டுள்ளதாகத் தெலுங்கான ஐடித்துறை செயலாளர் ஜேஷ் ராஜன் தெரிவித்தார்.
13,000 பணியாளர்கள்
1,500 கோடி ரூபாய் முதலீட்டில் உருவாகும் இந்தப் புதிய அலுவலகம் அடுத்த 4 வருடத்தில் முழுமையாகச் செயல்பட உள்ளது. மேலும் இந்தப் புதிய அலுவலகத்தில் 13,000 பணியாளர்கள் அடக்க உள்ளது.
கூகிள் தலைமையகம்
தெலுங்கானா ஐடித்துறையின் சார்பாக ராஜன் கடந்த மே 11ஆம் தேதி கூகிள் நிறுவனத்தின் Mountain View, கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள அலுவலகத்திற்குச் சென்று பல தலைவர்களைச் சந்தித்துத இந்தியாவிலும், ஹைதராபாத்தில் உள்ள வாய்ப்புகளைக் குறித்து விவரித்தார்.
கூகிள்
இதன் பின் கூகிள் நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர், ஹைதராபாத்தில் புதிய அலுவலகத்தை அமைக்கும் பணியில் தெலுங்கான அரசுடன் இணைய உள்ளதாகத் தெரிவித்தார்.
மைக்ரோசாப்ட்
மேலும் உலகிலேயே மிகப்பெரிய மென்பொருள் நிறுவனமான மைக்ரோசாப்ட் நிறுவனம் இந்தியாவில் ஹைதராபாத்தில் நகரத்தில் மட்டுமே உள்ளது குறிப்பிடத்தக்கத்து.


Click it and Unblock the Notifications