டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் காலாண்டு லாப அளவு 56% சதவீத சரிந்தது!
மும்பை: நாட்டின் மிகப்பெரிய ஆட்டோமொபைல் நிறுவனமான டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் 4வது காலாண்டின் லாப அளவு 56 சதவீதம் சரிந்தது.
இக்காலகட்டத்தில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் லாப அளவு 1,716.5 கோடி ரூபாயாக உள்ளது, இதனால் சந்தை முதலீட்டாளர்கள் பெரும் ஏமாற்றத்தை அடைந்தனர்.

மேலும் இந்நிறுவனத்தின் மொத்த வருவாய் அளவு 3.5 சதவீதம் உயர்ந்து 67,576 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது, இதனிடையில் இந்நிறுவனத்தின் நிகர லாப அளவு 15.61 சதவீதம் சரிந்து 8,439 கோடி ரூபாயாக உள்ளது.
இந்நிறுவன முடிவுகள் சந்தை கணிப்புகளையும் எதிர்பார்ப்புகளையும் பொய்த்ததால், மும்பை பங்குச் சந்தையில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் பங்குகள் 1.25 சதவீதம் வரை சரிந்து 499 ரூபாய்க்கு வர்த்தகம் செய்யப்படுகிறது.


Click it and Unblock the Notifications