டெல்லி: நரேந்திர மோடியின் வளர்ச்சி திட்டங்கள் அன்னிய முதலீட்டாளர்களை வெகுவாக கவர்ந்து, இதனால் கடந்த ஒரு வருட ஆட்சியில் சுமார் 2.5 லட்சம் கோடி ரூபாயை அன்னிய முதலீடு இந்திய சந்தையில் முதலீடு செய்துள்ளனர்.
கடன் மற்றும் பங்குச் சந்தை
சந்தை கட்டுப்பாட்டு ஆணையமான செபி அளித்த தகவலின் படி திங்கட்கிழமையுடன் முடிவடைந்த ஒரு வருட மோடி ஆட்சியில் கடன் சந்தையில் 1,58,165 கோடி ரூபாயும், பங்குச் சந்தையில் 93,636 கோடி ரூபாயும் அன்னிய முதலீட்டாளர்கள் முதலீடு செய்துள்ளனர்.
ஐஎம்எப், உலக வங்கி
இன்றளவு இந்திய சந்தை மிகவும் வளர்ச்சி மிக்க சந்தையாக சர்வதேச சந்தையில் பார்க்கப்படுகிறது.
குறிப்பாக ஐஎம்எப், உலக வங்கி ஆகியவை இந்திய சந்தையின் வளர்ச்சி தொடர்ந்து வளர்ச்சி பாதையில் இருப்பதாக அறிவித்துள்ளனர்.
அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய பொருளாதாரம்
மேலும் அமெரிக்க பெடரல் அரசு பத்திரங்கள் மீதான வட்டி விகிதத்தை உயர்ந்து முடிவைக் கைவிட்டால், இந்திய சந்தையில் அன்னிய முதலீடு 2 முதல் 3 மடங்கு வரை உயரும்.
இதற்கு சாதகமாக ஐரோப்பிய சந்தையும் பொருளாதார வளர்ச்சியில் மந்தமாக உள்ளது.
மேட் வரி
மே மாத்தில் அன்னிய முதலீட்டாளர்கள் மீது விதிக்கப்பட்ட மேட் வரி பிரச்சனையின் காரணமாக இந்திய சந்தையில் 14,000 கோடி ரூபாய் அன்னிய முதலீடு குறைந்தது.
பங்குச் சந்தை
அன்னிய முதலீட்டின் காரணமாக மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 3000 புள்ளிகள் வரை உயர்ந்தது என செபி தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications