கோடி ரூபாய் சம்பளம் தருவதில் ஐடித் துறை வேஸ்ட்.. ஈகாமர்ஸ் தான் பெஸ்ட்!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பெங்களூரு: இந்தியாவில் ஈகாமர்ஸ் துறை வளர்ந்து சில வருடங்களே ஆன நிலையில், கோடி ரூபாய் சம்பளம் வாங்கும் பணியாளர்கள் எண்ணிக்கை 500 ஆக உயர்ந்துள்ளது என 5 ஆய்வு நிறுவனங்கள் கூறுகிறது.

 

இந்திய சாப்ட்வேர் துறையை மாற்றியமைத்தாக மார்தட்டிக் கொள்ளும் இன்போசிஸ் நிறுவனத்திலேயே 113 பேர் தான் கோடி ரூபாய் சம்பளம் பெறுகின்றனர், கடந்த வருடம் இதன் எண்ணிக்கை 18 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது. விப்ரோவில் வெறும் 36 மட்டுமே..

இது அல்லவா நிறுவனம்

இது அல்லவா நிறுவனம்

பணியாளர்களுக்குக் கோடி ரூபாய் சம்பளம் தருவதில் பிளிப்கார்ட், அமேசான், ஸ்னாப்டீல், ஓலா, யுபர், குவிக்கர், காமன்புளோர், எப்மீ, ஒஎல்எக்ஸ் ஆகியவை முன்னணியில் உள்ளது.

பணியாளர்கள் நியமனம்

பணியாளர்கள் நியமனம்

இந்தியாவில் ஈகாமர்ஸ் துறையில் பெரிய அளவில் வர்த்தகம் செய்யும் நிறுவனங்கள் எண்ணிக்கை வெகு குறைவு. இந்நிலையிலும் ABC Consultants நிறுவனம், இத்துறைக்குக் கடந்த 6 மாதத்தில் 100க்கும் மேற்பட்ட உயர் அதிகாரிகளை நியமிக்கும் பணியில் ஈட்டுப்பட்டது.

பிற நிறுவனங்கள்

பிற நிறுவனங்கள்

லாங்ஹவுஸ் கன்சல்டிங், ஆர்ஜிஎப் எக்ஸ்கூடிவ் சர்ச், ஆகிய நிறுவனங்கள் குறைந்தது ஒரு வருடத்திற்கு 250 உயர் அதிகாரிகளை இத்துறையில் நியமிப்பதாகத் தெரிவித்துள்ளது.

இதன் மூலம் இத்துறையில் அடுத்து வரும் மாதங்களில் மிகப்பெரிய அளவில் வேலைவாய்ப்புக் காத்துக்கிடப்பது உறுதியாகியுள்ளது.

முதலீடு
 

முதலீடு

ஈகாமர்ஸ் நிறுவனங்களுக்கு அதிகளவிலான முதலீடு கிடைக்கிறது. இதை உள்கட்டுமான மேம்பாட்டுக்காகவோ அல்லது பணியாளர்கள் மீது செலவு செய்யவேண்டும். இந்நிலையில் நிறுவனங்களின் தற்போதைய வர்த்தகத்திற்குத் தேவையான கட்டுமானங்கள் உள்ளதால், பணியாளர்கள் மீது செலவு செய்து வருகிறது.

கோடி எல்லாம் தெருக்கோடியில்..

கோடி எல்லாம் தெருக்கோடியில்..

இதே நிலை அனைத்து துறைகளிலும் நிலவினால் கோடி ரூபாய் சம்பளம் எல்லாம் தெருக்கோடி என்ற நிலைதான் திரும்பும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

e-commerce companies may offer 500 jobs of Rs 1 crore salaries each

Ecommerce companies could roll out 500 jobs with salaries of more than Rs 1 crore each this year, according to estimates by five search firms including RGF Executive Search and Longhouse Consulting.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X