சென்னை: இலவசமாகக் கால் மற்றும் மெசேஜ் சேவை அளிக்கும் வாட்ஸ்அப், ஸ்கைப் போன்ற அப்-கள் மூலம் இந்திய தொலைத்தொடர்பு நிறுவனங்களின் வருவாய் அதிகளவில் பாதித்துள்ளது.
குறிப்பாக இந்திய சந்தையில் அதிக வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ள ஏர்டெல், வோடாபோன் மற்றும் ஐடியா செல்லுலார் ஆகியவை நிறுவனங்களின் வருவாய் கடந்த 2 வருடங்களில் 50 சதவீதம் அளவிற்குக் குறைந்துள்ளது.
இண்டர்நெட் கட்டண உயர்வு
இதன் காரணமாகத் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் இண்டர்நெட் கட்டணத்தை உயர்த்தத் திட்டமிட்டு வருகின்றனர்.
இக்கட்டணத்தை உயர்த்துவதன் மூலம் நிறுவனங்களின் வருவாய் இழப்பை ஈடு செய்ய உள்ளதாகக் கிரேடிட் சூசி நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஸ்பெக்ட்ரம் மற்றும் சேவை வரி
ஏற்கனவே மொபைல் சேவை நிறுவங்களின் செலவீனம் ஸ்பெக்ட்ரம் ஏலம் மற்றும் சேவை வரி ஆகியவற்றின் காரணமாக அதிகரித்துள்ள நிலையில் தங்களது சேவை கட்டணத்தை 20 சதவீதம் வரை உயர்த்தத் திட்டமிட்டுள்ளது.
இந்நிலையில் OTT சேவைகளின் மூலம் மிகப்பெரிய அளவிலான வருவாய் இழப்பை தொலைத்தொடர்பு சந்தித்து வருகிறது.
இந்தியா தான் உச்சம்
உலக நாடுகளை ஒப்பிடுகையில் இண்டர்நெட் பயன்பாடு வளர்ந்துள்ள இந்தியாவில் இத்தகைய செயலிகள் (APPS) மூலம் அதிகளவிலான வருவாய் இழப்புச் சந்தித்துள்ளதாகக் கிரேடிட் சூசி தெரிவித்துள்ளது.
இந்தியாவிற்கு அடுத்தப்படியாக அமெரிக்க, ஐரோப்பா, ஆஸ்திரேலியா, சீனா மற்றும் கொரியா உள்ளது.
80 சதவீத வருவாய்
சில வருடங்களுக்கு முன்பு இந்திய தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தங்களது 80 சதவீத வருவாயை கால் சேவை மூலம் பெற்று வந்தது குறிப்பிடத்தக்கது.
ஒவர்-தீ டாப் சேவை
இனி வரும் மாதங்களில் ஒவர்-தீ டாப் (OTT) சேவைகளான வாட்ஸ்அப் மற்றும் ஸ்கைப் சேவைகளின் மூலம் இந்திய மொபைல் சேவை நிறுவனங்கள் 30 முதல் 40 சதவீத வருவாய் இழப்பைச் சந்திக்கும் என ஆய்வுகள் கூறுகிறது.
மெசேஜ் சேவை
கடந்த இரண்டு வருடத்தில் மெசேஜ் சேவையில் ஏற்பட்ட மந்த நிலையால் வருவாய் 30 சதவீத சரிந்து 2.76 பில்லியன் டாலர் வர்த்தகத்தை இந்திய சந்தை இழந்துள்ளது.
இந்நிலையில் மெசேஜ் சேவை பயன்படுத்தும் வாடிக்கையாளராக வங்கி, ஆன்லைன் சேவை நிறுவனம் ஆகியவை உள்ளது.
வங்கித் துறை
தற்போது வங்கித்துறை தனது வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் தங்களது கணக்கு குறித்து மெசேஜ் சேவை அளித்து வருவதால், அதற்கான செலவீனம் அதிகரித்துள்ளது.
எனவே இச்செலவைக் குறைக்கப் புதிய முறையைக் கையாள உள்ளதாக வங்கித்துறை தெரிவித்துள்ளது.
தங்கம் விலை
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications