டெல்லி: இந்தியாவில் மலிவு விலை விமான நிறுவனங்களில் முதலிடத்தில் உள்ள ஸ்பைஸ்ஜெட், 2014ஆம் நிதியாண்டின் கடைசிக் காலாண்டில் 22.52 கோடி ரூபாய் (3.53 மில்லியன் டாலர்) லாபம் பெற்றுள்ளது.
7 காலாண்டுகளுக்குப் பின் இந்நிறுவனம் இப்போதுதான் லாபத்தைச் சந்தித்துள்ளதாக ஸ்பைஸ்ஜெட் நிர்வாகத் தலைவர் அஜய் சிங் வியாழக்கிழமை தெரிவித்தார்.
320 கோடி நஷ்டம்..
டிசம்பர் 31ஆம் தேதி முடிவடைந்த காலாண்டில் இந்நிறுவனம் அதிகப்படியான செலவீனம் மற்றும் தள்ளுபடி கட்டணங்களால், ஸ்பைஸ்ஜெட் சுமார் 320 கோடி ரூபாய் நஷ்டத்தைச் சிந்தித்தது.
இதன் பின்னரே இந்நிறுவனத்தின் நிர்வாகப் பொறுப்பு அனைத்தும் அஜய் சிங்-கிற்குக் கைமாறியது.
அஜய் சிங்
காலாண்டு முடிவுகளை வெளியிடும் போது இந்நிறுவனத்தின் தலைவரான அஜய் சிங் கூறுகையில், "இக்காலாண்டு முடிவுகள் நிறுவனத்தின் நிதி நிலை மேம்பட்டு வருவதைத் தெளிவாகக் காட்டுகிறது, இதன் பின் தொடர் வளர்ச்சியை ஸ்பைஸ்ஜெட் பதிவு செய்யும் என நம்புகிறோம்" என்று கூறினார்.
திடீர் முதலீடு
கலாநிதி மாறன் தலைமையில் செயல்பட்டு வந்த ஸ்பெஸ்ஜெட், அதிகளவிலான சலுகையை அறிவித்துப் பயணிகளைக் கவர்ந்தாலும், நிறுவனத்தின் நிதிநிலையை மேம்படுத்த தவறியது.
நிறுவனம் கடனில் மூழ்கிய நிலையில், நிர்வாகப் பொறுப்புகளையும், புதிய முதலீடுகளையும் கொண்டு வந்து சேர்த்தார் அஜய்.
செலவீன குறைப்பு
இந்நிறுவனத்தின் நிதிநிலை மற்றும் செயல்முறையை மேம்படுத்த அஜய் சிங் தலைமையில் பல மறுசீரமைப்புத் திட்டங்கள் மற்றும் செலவீன குறைப்பு நடவடிக்கைகளை இந்நிறுவனம் மேம்கொண்டு வருகிறது.
சந்தை மதிப்பு
இன்றைய நிலையில் ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் சந்தை மதிப்பு 9.4 சதவீதமாக உயர்ந்துள்ளது.


Click it and Unblock the Notifications