மும்பை: நாட்டின் மிகப்பெரிய தனியார் துறை வங்கியான ஐசிஐசிஐ வங்கித் தலைவர் சந்தா கோச்சார் சுமார் 12.06 சதவீதம் ஊதிய உயர்வு பெற்றுள்ளார்.
2014-15ஆம் ஆண்டுக்காலத்தில் நாட்டின் பொருளாதார நிலையற்ற நிலையில் உள்ள போதும் இவ்வங்கி சிறப்பாகச் செயல்பட்டது. இதற்கு முழுமையான காரணம் வங்கியின் தலைவர் சந்தா கோச்சார் தான் என்று ஐசிஐசிஐ வங்கி நிர்வாகம் கூறியுள்ளது.

இதன்படி 2015ஆம் நிதியாண்டில் சந்தா கோச்சார் அவர்கள் 12.06 சதவீத ஊதிய உயர்வுடன் வருடத்திற்கு 5.85 கோடி ரூபாய் சம்பளம் பெற உள்ளார்.
2014-15ஆம் ஆண்டுக் காலத்தில் ஐசிஐசிஐ வங்கியின் லாப அளவு 14 சதவீதம் உயர்ந்து 11,175 கோடி ரூபாயாக உள்ளது. கடந்த வருடம் இதன் அளவு 9,810 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
இவ்வங்கியின் சக போட்டி நிறுவனமான ஆக்சிஸ் வங்கியின் லாபம் 18.33 சதவீத உயர்வு, ஹெச்டிஎப்சி வங்கி 20.49 சதவீதமும் உயர்ந்துள்ளது.


Click it and Unblock the Notifications