டெல்லி: நாட்டில் மொபைல் வாடிக்கையாளர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், மொபைல் டேட்டா சேவையின் வளர்ச்சி பல மடங்கு உயர்ந்துள்ளதாகப் பல ஆய்வு முடிவுகள் தெரிவிக்கிறது.
குறிப்பாக ஸ்மார்ட்போன் பயன்பாட்டாளர்கள் எண்ணிக்கை உயர்ந்ததால், கால் மற்றும் மெசேஜ் சேவையின் வளர்ச்சி குறைந்துள்ளது. இதனால் ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வருமானம் 50% குறைந்துள்ளது.
இதன் காரணமாகவே ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனம் சரியாகத் திட்டமிட்டு டேட்டா சேவையின் வளர்ச்சியை மேம்படுத்த 2,000 கோடி ரூபாய் முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளது.
குருதீப் சிங்
இதுகுறித்து ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனத்தின் நுகர்வோர் வர்த்தகத் தலைவரான குருதீப் சிங், "நிறுவனத்தின் டேட்டா சேவையின் வருவாய் அதிகரிக்க இச்சேவையை மேம்படுத்த 1,500 முதல் 2,000 கோடி ரூபாய் வரை முதலீடு செய்யத் திட்டமிட்டு உள்ளதாக" கூறினார்.
வருவாய்
கடந்த வெள்ளிக்கிழமை அறிவித்தபடி 4வது காலாண்டில் இந்நிறுவனத்தின் மொத்த லாப அளவு 46 சதவீதம் அதிகரித்து 228 கோடி ரூபாயாக உள்ளது. இதில் பெரும் பகுதி வையர்லெஸ் இண்டர்நெட் சேவையின் மூலம் கிடைத்ததுள்ளதாகவும் இந்நிறுவனம் தெரிவித்தது.
நிதி திரட்டல்
இம்முதலீட்டுத் திட்டத்தின் படி ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனம் ஏற்கனவே 300 மில்லியன் டாலர் நிதி திரட்டியுள்ளது.
டேட்டா சேவை வளர்ச்சி
ஜனவரி முதல் மார்ச் மாத காலகட்டத்தில் இந்நிறுவனத்தின் டேட்டா சேவையின் வளர்ச்சி 25.2 சதவீதமாக உள்ளது.


Click it and Unblock the Notifications