பெங்களூரு: காலம் காலமாக இன்போசிஸ் நிறுவனத்தில் நிலவி வந்த பார்மல் டிரஸ் கோடை, கேஷுவல் டிரஸ் கோடாக விஷால் சிக்கா மாற்றியுள்ளார். இதனால் இன்போசிஸ் பணியாளர்கள் குதுகலத்தில் திளைத்துள்ளனர்.
இனி எல்லா இன்போசிஸ் பணியாளர்களையும் யோ யோ லுக்கில் காணலாம்.
பணியாளர்கள் வெளிநடப்பு
இப்புதிய ரூல்ஸ் மூலம் இந்நிறுவனத்தில் பணியாளர்கள் வெளியேற்றத்தை அதிகளவில் குறைக்க முடியும் என இன்போசிஸ் நிர்வாகம் நம்புகிறது.
வெள்ளிக்கிழமை
இதுவரையில் வெள்ளிக்கிழமை மட்டும் கேஷுவல் டிரஸ் கோடை அனுமதித்த இன்போசிஸ் வாரம் முழுவதும் கேஷுவலாக வர அனுமதி அளித்துள்ளது மிகப்பெரிய மாற்றம்.
இமெயில்
இதுகுறித்துப் பணியாளர்களுக்கு நிர்வாகம் அனுப்பிய மின்னஞ்சலில், பணியாளர்கள் தங்களின் விருப்பத்திற்கு ஏற்ப ஆடைகளைத் தேர்ந்தெடுக்க உரிமை உள்ளது போதும், இன்போசிஸ் பெயரையும் தன்மையும் காப்பாற்றும் வகையில் ஆடைகளை உடுத்தக் கேட்டுக்கொள்ளப்படுகிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
விஷால் சிக்கா
நாம் உடுத்தும் உடை கூட நமக்குள் இருக்கும் திறனை வெளிப்படுத்தவும் மேம்படுத்திக் கொள்ளவும் தடையாக அமையும் என்பதை விஷால் சிக்கா நம்புகிறார்.
இதனால் தான் எப்போது தனக்குப் பிடி கருப்பு நிற டி-சர்ட் மற்றும் கருப்பு நிற ஜாக்கெட்டை அணிந்து வருகிறார் (ஸ்டீவ் ஜாப்ஸ் போல்..).


Click it and Unblock the Notifications