மும்பை: நாட்டின் பணவட்ட நிலையைக் கட்டுப்படுத்தவும், பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தும் நோக்கத்தில் ரிசர்வ் வங்கி இன்று வெளியிட்ட இரு மாத நாணய மறுஆய்வு கொள்கையில் வணிக வங்கிகளுக்கு அளிக்கப்படும் கடனுக்கான வட்டி விகிதத்தை 0.25% குறைத்துள்ளது.
இதனால் வணிக வங்கிகள் மக்களுக்கு அளிக்கப்படும் கடனில், கூடிய விரைவில் வட்டி வகித குறைப்பிற்கான அறிவிப்பை வெளியிடும் என நம்பப்படுகிறது.
ரெப்போ விகிதம்
இன்று ஆர்பிஐ அறிவித்த நாணய கொள்கையில் ரெப்போ விகிதம் 8 சதவீதத்தில் இருந்து 7.25 சதவீதமாகவும், சிஆர்ஆர் வகிதத்தில் எந்த மாற்றமும் இல்லாமல் 4 சதவீதமாக அறிவித்துள்ளது.
3வது முறை வட்டிக் குறைப்பு
ரிசர்வ் வங்கி கடந்த 4 மாதத்தில் 3வது முறையாக வட்டி வகித்தைத குறைத்துள்ளது குறிப்பிடத்தக்கத்து.
உணவு பணவீக்கம்
இந்தியாவில் நிலவும் பருவ நிலை மாற்றத்தால் உணவு பொருட்களின் உற்பத்தி கடுமையாகப் பாதித்துள்ளது. இதனால் உணவு பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக ரிசர்வ் வங்கி எச்சரித்துள்ளது.
வங்கி உரிமம்
கூடிய விரைவில் இந்தியாவில் வங்கிகள் துவங்குவதற்காக விண்ணப்பம் அளித்த நிறுவனங்களுக்கு முறையான உரிமத்தை வழங்கும் பணியில் ரிசர்வ் வங்கி இறங்கியுள்ளது. ஆகஸ்ட் மாத இறுதியில் இதற்கான அறிவிப்புகள் வெளியிடப்படும்.
பங்குச் சந்தை
ரிசர்வ் வங்கியின் அறிவிப்பை அடுத்து பங்குச் சந்தையில் வங்கி பங்குகள் அனைத்தும் சரிந்தது.


Click it and Unblock the Notifications